2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யெமனியப் போராட்டக்காரர்கள் பெப்ரவரி 3, 2011 அன்று சன்ஆவில்
போராளிகள் தலையில் இளஞ்சிவப்பு பட்டை அணிதலும் இளஞ்சிவப்பு சின்னங்களை தரித்தலும்.

2011 யெமனியப் புரட்சி (2011 Yemeni protests) துனீசியப் புரட்சியின் துவக்க காலத்திலேயே தொடங்கி 2011 எகிப்திய புரட்சி [1] மற்றும் பிற 2011 அரபுலக போராட்டங்களின் காலத்திலேயே இணையாக எழுந்தது. துவக்கத்தில் வேலையின்மை, பொருளாதாரநிலை, ஊழல் குறித்தே போராட்டங்கள் நடந்தன[2] யெமன் நாட்டு அரசியலமைப்பை மாற்றும் அரசின் திட்டத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் நிகழ்ந்தன. எழுச்சியின் உச்சகட்டமாக குடியரசுத் தலைவர் அலி அப்துல்லா சாலேயின் பதவி விலகலை வற்புறுத்துமளவிற்கு போராட்டங்கள் சென்றுள்ளன.

இளஞ்சிவப்பு பயன்பாடு[தொகு]

யெமனியப் போராட்டக்காரர்கள் தங்கள் வன்முறை சாரா நோக்கத்தைக் குறிக்கவும் "யாசுமின் புரட்சியின்" நினைவாகவும் இளஞ்சிவப்பு தலைப்பட்டைகளை அணிந்திருந்தனர்.[3] எதிர்கட்சித் தலைவரும் சட்டவியலாளருமான சாகி அல்-காதி இளஞ்சிவப்பு அன்பைத் தெரிவிக்கவும் போராட்டங்கள் அமைதியாக நடைபெறும் என்பதைக் குறிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார்.[4] போராட்ட கூட்டங்களின் நடுவே தென்பட்ட கூடுதலான இளஞ்சிவப்பு பட்டைகள் எந்தளவு திட்டமிடல் நடந்தேறியுள்ளது என்பதைக் காட்டுவதாக அமைந்திருந்தது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yemen protests: Thousands call on president to leave". BBC News. 27 Jan 2011. http://www.bbc.co.uk/news/world-middle-east-12295864. 
  2. "Yemen protests: 'People are fed up with corruption'". BBC News. 27 January 2011. http://www.bbc.co.uk/news/world-middle-east-12298019. 
  3. Finn, Tom (27 January 2011). "Yemenis take to the streets calling for President Saleh to step down". guardian.co.uk. http://www.guardian.co.uk/world/2011/jan/27/yemen-protests-president-saleh. 
  4. 4.0 4.1 Bakri, Nada (January 27, 2011). "Yemen’s Opposition Goes to Code Pink". The New York Times. http://thelede.blogs.nytimes.com/2011/01/27/yemens-opposition-goes-to-code-pink/.