உள்ளடக்கத்துக்குச் செல்

முகமது நபௌசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது நபௌசு
محمد نبوس
பிறப்பு(1983-02-27)27 பெப்ரவரி 1983
பெங்காசி, லிபியா
இறப்பு19 மார்ச்சு 2011(2011-03-19) (அகவை 28)
பெங்காசி, லிபியா
இறப்பிற்கான
காரணம்
குண்டடி காயம்
தேசியம்லிபியா
படித்த கல்வி நிறுவனங்கள்காரியுனிசு பல்கலைக்கழகம்
பணிஇதழியலாளர், தொழில் முனைவர்/நிறுவனர்: லிப்யா அல்ஹுர்ரா தொலைக்காட்சி
சமயம்சுன்னி இசுலாம்
வாழ்க்கைத்
துணை
"பெர்டிட்டா"
பிள்ளைகள்மாயார் "மாயா" (பி. சூன் 2, 2011)

முகமது மோ நபௌசு (محمد نبوس ,Mohamed "Mo" Nabbous ; 27 பெப்ரவரி 1983 – 19 மார்ச் 2011) லிபியாவின் தகவல்தொழில்நுட்ப பொறியாளர், தொழில் முனைவர் மற்றும் லிபியா அல் ஹுர்ரா தொலைக்காட்சியை நிறுவிய குடிமகன் இதழியலாளர் ஆவார்.

லிபிய உள்நாட்டுப் போரின்போது, நபௌசு, லிபியாவில் கதாஃபி பதவிக்கு வந்தபிறகான முதல் சுதந்தரமான செய்தி ஒளிபரப்பு நிறுவனமான, லிபியா அல்ஹுர்ரா தொலைக்காட்சியை நிறுவினார். பெங்காசியில் பெப்ரவரி 19, 2011 அன்று லிபியா அல்ஹுர்ரா தொலைக்காட்சி நிறுவப்பட்டது; பெப்ரவரி 17, 2011 கிளர்ச்சிகளை அடுத்து முஅம்மர் அல் கதாஃபி இணையச் சேவைகளை தடை செய்த நேரத்தில் நபௌசு செயற்கைக்கோள் மூலமாக இருவழி தொடர்பு ஏற்படுத்தி தமது சேவைகளைத் துவக்கினார்.[1] மார்ச்சு 19, 2011 அன்று பெங்காசியில் கிளர்ச்சியாளர்களுடனும் பொதுமக்களுடனும் அரசுப்படைகள் சண்டை இட்டுக்கொண்டிருந்ததை தொலைக்காட்சிக்கு அறிவித்துக் கொண்டிருந்த நேரத்தில் கதாஃபி சார்பாளரால் மறைந்திருந்து சுடப்பட்டு கொல்லப்பட்டார்[2] நபௌசு கொல்லப்பட்டதை அடுத்த சிலமணி நேரங்களிலேயே ஐநா கூட்டணிப்படையின் வானூர்திகள் ஐநா பாதுகாப்பு அவை வெளியிட்ட "பறத்தல் தடை"யை செயலாக்கும் வகையில் லிபிய வான்வழிகளை ஆக்கிரமித்தன. தனது கடைசி காலத்தில் லிபியாவில் நிலவிய மனித உரிமைமீறல்களை பன்னாட்டளவில் பரப்புரை ஆற்ற அரும்பாடுபட்டார். நபௌசியின் மரணம் சிஎன்என் போன்ற பன்னாட்டு ஊடகங்களால் பரவலாக ஒளிபரப்பப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "March 19 - 4:43pm". Al Jazeera Libya Live Blog. Al Jazeera English. 19 March 2011. Archived from the original on 19 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 20 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Online journalist Mohammed Nabbous killed in Libya". The Spy Report (Media Spy). 20 March 2011 இம் மூலத்தில் இருந்து 6 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120106111634/http://www.mediaspy.org/report/2011/03/20/online-journalist-mohammed-nabbous-killed-in-libya/. பார்த்த நாள்: 20 March 2011. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_நபௌசு&oldid=3947070" இலிருந்து மீள்விக்கப்பட்டது