2,4-டைநைட்ரோ அனிலின்
The ball-and-stick structure of 2,4-dinitroaniline
| |
2,4-டைநைட்ரோ அனிலின் கட்டமைப்பு
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,4-டைநைட்ரோ அனிலின்
| |
வேறு பெயர்கள்
1-அமினோ-2,4-டைநைட்ரோபென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
97-02-9 | |
ChEBI | CHEBI:34242 |
ChEMBL | ChEMBL354318 |
ChemSpider | 7045 |
EC number | 202-553-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14713 |
பப்கெம் | 7321 |
வே.ந.வி.ப எண் | BX9100000 |
| |
UNII | 5BI780R6W6 |
UN number | 1596 |
பண்புகள் | |
C6H5N3O4 | |
வாய்ப்பாட்டு எடை | 183.12 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது, எரியும் தூள் |
அடர்த்தி | 1.61 கி/செ.மீ |
உருகுநிலை | 187.8 °C (370.0 °F; 460.9 K) |
கொதிநிலை | சிதைவடையும் |
0.06 கி/லி (20 ºசெல்சியசு) | |
கரைதிறன் | அசிட்டோன், எத்தில் அசிட்டேட்டு, அசிட்டோ நைட்ரைல், பெரும்பாலான ஆல்ககால்களில் கரையும். |
காடித்தன்மை எண் (pKa) | -4.53 (இணை அமிலம்) ; 18.46 |
Explosive data | |
Shock sensitivity | குறைவு |
Friction sensitivity | குறைவு |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | வெடிக்கும், நச்சு, உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கானது. |
GHS pictograms | வார்ப்புரு:GHS01 |
GHS signal word | அபாயம் |
H300, H310, H330, H373, H411 | |
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 224 °C (435 °F; 497 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
285 மில்லி கிராம்/கிலோகிராம் (வாய்வழி, எலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,4-டைநைட்ரோ அனிலின் (2,4-Dinitroaniline) என்பது C6H5N3O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு வெடிபொருளாகவும், ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களை அடையாளப்படுத்த உதவும் ஒரு வினையாக்கியாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]1-குளோரோ-2,4-டைநைட்ரோபென்சீனுடன் அமோனியாவை வினைபுரியச் செய்து 2,4-டைநைட்ரோ அனிலினை தயாரிக்கலாம். அனிலினை மின்னணுநாட்ட அரோமாட்டிக் பதிலீடு வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம். அனிலினின் வினைத்திறன் காரணமாக நேரடியான நைட்ரோயேற்றம் இவ்வினையில் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் அனிலின் அனிலினியமாக புரோட்டானேற்றம் அடையும் அல்லது ஆக்சிசனேற்றப்பட்டு விடும். எனவே அசிட்டைல் பாதுகாப்பு வினை பயன்படுத்தப்பட வேண்டும்.
காரத்தன்மை
[தொகு]அனிலினுடன் ஒப்பிடுகையில் 2,4-டைநைட்ரோ அனிலினின் காரத்தன்மை மேலும் பலவீனமாக உள்ளது. நைட்ரோ குழுக்களின் எலக்ட்ரான்-திரும்பப் பெறும் தன்மை இதற்குக் காரணமாகும். இது 2,4-டைநைட்ரோ அனிலினின் இணை அமிலத்தின் காடித்தன்மை எண் மதிப்பை ஐதரோனியம் அயனிகளைக் காட்டிலும் குறைவாக மாற்றுகிறது. அதாவது இது ஒரு வலுவான அமிலம் ஆகும்.
அமினோ குழுவிலுள்ள புரோட்டான்களும் அனிலினைக்காட்டிலும் அமிலத்தன்மை மிகுந்தனவாக உள்ளன.
பயன்கள்
[தொகு]2,4-டைநைட்ரோ அனிலின் பொதுவாக ஒரு வெடிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. அசோ சாயங்கள் மற்றும் தெளிக்கும் சாயங்களை பெருமளவில் தயாரிக்க இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது, அச்சிடும் மை, டோனர் எனப்படும் வண்ணச் சாயம் மற்றும் பாதுகாப்புப் பொருள்களான பதனச் சரக்குகளை தயாரிப்பதற்கும் இதைப் பயன்படுத்தலாம். தெளிப்பு சாயங்கள், நடுநிலை சாயங்கள், கந்தகச் சாயங்கள், கரிம நிறமிகள் போன்றவற்றில் இது ஓர் இடைநிலைப் பொருளாக உள்ளது.
பாதுகாப்பு
[தொகு]2,4-டைநைட்ரோ அனிலின் மிதமான நச்சுத்தன்மையுடைய ஒரு சேர்மமாகும். இதன் உயிர் கொல்லும் அளவு 285 மி.கி / கிலோ ஆகும். இருப்பினும் இச்சேர்மத்தின் முக்கிய ஆபத்து என்னவென்றால் இது வெடிக்கும் மற்றும் உராய்வு அல்லது வெப்பம் காரணமாக இது தீப்பிடித்து எரியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2,4-Dinitroaniline CAS#: 97-02-9". www.chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
- ↑ PubChem. "2,4-Dinitroaniline". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.