1பாஸ்வோர்டு
உருவாக்குனர் | அஜைல் வெப் சொல்யூசன்ஸ் |
---|---|
தொடக்க வெளியீடு | சூன் 18, 2006[1] |
இயக்கு முறைமை | விண்டோசு , ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஐஓஎஸ் |
மென்பொருள் வகைமை | கடவுச்சொல் மேலாண்மை |
இணையத்தளம் | 1password |
ஒன்பாஸ்வோர்டு (1Password), அஜைல் வெப் சொல்யூசன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மென்பொருள். இது மாக் இயங்குதளம், விண்டோசு, ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆகிய இயங்குதளங்களில், பயர்பாக்சு, சபாரி உள்ளிட்ட அனைத்து வலை உலாவிகளிலும்[2] இயங்கும். அனைத்துக் கடவுச்சொற்களையும் இதனிடம் வழங்கிவிட்டு, பொதுக் கடவுச்சொல்லை உள்ளிட்டுப் பயன்படுத்தலாம். எந்த தளத்திற்கு சென்றாலும், அங்கே புலங்களில் உள்ளிட வேண்டிய அனைத்து தகவல்களையும் இதுவே வழங்கும். இதன்மூலம், வெவ்வேறு தளங்களின் கடவுச்சொற்களை மாற்றினாலும், பொதுக் கடவுச்சொல்லை வழங்குவதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
1கடவுச்சொல்லானது முதலில் மாக் இயக்குதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்பு மைக்ரோசாப்ட் விண்டோசுவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கடவுச்சொல் மட்டுமல்லாது வங்கிக் கணக்குகள், பாதுகாப்புக் குறிப்புகள் போன்றவற்றையும் இதில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.[3]
சிறப்பம்சங்கள்
[தொகு]இதன் சிறப்பம்சம் என்னவெனில் நாம் தனியாக இந்த மென்பொருளை நிறுவவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பயர் பாக்சு, இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் போன்றவற்றில் நீட்சியாக இணைத்தாலே இதனைப் பயன்படுத்த இயலும். பின் நம் இணையத்தில் உலாவும்போது நம்முடைய கடவுச் சொல் போன்றவற்றை கண்காணித்து இதனை சேமிக்க வேண்டுமா என அனுமதி கேட்கும் . நம்முடைய அனுமதிக்குப் பிறகு மீண்டும் புகுபதிகையின் போது புலங்களில் தானாகவே அந்த விவரங்களை உள்ளீடு செய்துகொள்ளும். மேலும் ஒருவருடைய அனைத்து கடவுச்சொற்களையும் இதன் மூலம் நிர்வகிக்க இயலும். தானாக காப்புநகலெடுத்தல், தானாகவே பூட்டுதல், மற்றும் தேடுதல் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.[4]
கடவுச் சொல் கோப்பு ஒத்திசைவு
[தொகு]ஒன்கடவுச்சொல்லானது கடவுச்சொற்களை மேக சேமிப்பகத்தில் சேமித்து வைக்கக் கூடிய வசதிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. மேலும் தொலை சேவைக் கணிப்பொறிகளில் ஒத்திசைவு செய்வதன் மூலம் அந்தக் கடவுச் சொற்களை நாம் பெற இயலாது. ஆனால் டிராப்பாக்ஸ் எனும் செயலி மூலமாகவும் (அனைத்து தங்களிலும்) , ஒய்-ஃபை,[5] ஐ மேக சேமிப்பகம் (ஐ கொளுவு) மூலமாக நம்மால் ஒத்திசைவு செய்ய இயலும் .[6] தற்போது 1கடவுச்சொல் இணையதளத்தின் மூலமாக கட்டணம் செலுத்தி ஒத்திசைவு செய்யும் வகையில் அதன் மேம்பாட்டாளர்கள் இதனை வடிவமைத்துள்ளனர். நிகழ்விட ஒய்-ஃபை மற்றும் ஐ மேக சேமிப்பகத்தின் ஒத்திசைவு ஆகிய வசதிகள் அனைத்தும் மாக் இயக்குதளம் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் மட்டுமே செயல்படும்.[7][8]
உலாவி நீட்சி
[தொகு]ஒன்கடவுச்சொல்லானது பிரேவ், பயர் பாக்சு, இன்டெர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பெரா (உலாவி), சபாரி உலாவி போன்ற உலாவிகளில் ஒருங்கிணைந்து (நீட்சியாக) செயல்படுகிறது.[2] இந்த நீட்சிகள் இணையத்தில் உள் நுழைவதற்கான கடவுச்சொல் மற்றும் பயனர் விவரங்கள் போன்றவற்றை சேமித்து வைக்கிறது. அதன் மூலம் நாம் இணையத்திற்குள் தானாகவே புகுபதிகை செய்ய இயலும். மேலும் ஒவ்வொரு வலைத்தளத்திற்கு வெவ்வேறு கடவுச் சொற்களைப் பயன்படுத்த இயலும்.[9]
உலாவி நீட்சிகளைப் பயன்படுத்த வேண்டும் எனில் நாம் உபயோகிக்கும் கணினியின் நிர்வாகியாக இருத்தல் அவசியம். இந்த அம்சத்தால் சிலர் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள கணினியைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தன். எனவே ஒன்கடவுச்சொல் இணையதளமானது ஒரு மாத கட்டணத்தை செலுத்துவதன் மூலம் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை நகல் எடுத்து புகுபதிகையின் போது ஒட்டக் கூடிய வசதியை அளித்தது[10].
கணக்கு வகைகள்
[தொகு]மூன்று வித கணக்குகளில் இதனை பயன்படுத்தலாம். தனிநபர் பயன்பாடு, குடும்பத்திற்கான பயன்பாடு, இதில் அதிகபட்சமாக 5 நபர்கள் பயன்படுத்த இயலும் ஆனால், ஒருமுறை பணம் செலுத்தினால் போதும். மூன்றாவதாக வணிகத்திற்கான கணக்கு.
பாதுகாப்பு
[தொகு]மறையாக்கம் (என்கிரிப்சன்)
[தொகு]இதன் பாதுகாப்பு முறைகளானது ஏஇஎஸ்-256 எனும் 256 பைட்டுமறையாக்கம் கொண்டு தகவல்கள் கடக்கும் போதும், நிலையாக இருக்கும் போதும் பாதுகாக்கப்படுகிறது.
ரகசிய திறவுகோல்
[தொகு]கடவுச்சொல்லுக்கான திறவுகோல் வருவிப்பிலும் 128 பைட்டுமறையாக்கம் செயல்படுகிறது. இதன் மூலம் ரகசிய திறவுகோலினை மற்றவர்கள் அறிவதற்கான வாய்ப்புகள் இல்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1Password 1.0.0 Release".
- ↑ 2.0 2.1 "1பாஸ்வேர்டு நீட்சிகள்". பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "1பாச்வேர்டு", சாஃப்டானிக் (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-03-15
- ↑ "1பாஸ்வேர்டு", சாஃப்டானிக் (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-03-15
- ↑ "ஒய் ஃபை யைப் பயன்படுத்தி ஒத்திசைவு செய்தல்". பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2014.
- ↑ "டிராப் பாக்சின் மூலமாக ஒத்திசைவு செய்தல்". பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2014.
- ↑ ஃபவ்லர், ஜியாஃப்ரி. "அனைத்து கடவுச் சொற்களையும் நிர்வகிக்க எளிதான வழி". தெ வால் ஸ்ட்ரீட் ஜர்னல். https://www.wsj.com/news/articles/SB10001424052702303647204579545801399272852. பார்த்த நாள்: 14 சூலை 2014.
- ↑ டெடெஸ்சி, பாப் (3 நவம்பர் 2010). "ஒரு மென்பொருளின் சிறிய உதவின் மூலம் அனைத்து கடவுச் சொற்களையும் நிவகிக்கலாம்". தெ நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2010/11/04/technology/personaltech/04smart.html. பார்த்த நாள்: 14 சூலை 2014.
- ↑ "உலாவி நீட்சிகள்". பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Families - 1Password". 1Password. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
மேலும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- மென்பொருள் பற்றிய பக்கம் (ஆங்கிலத்தில்)