மேக சேமிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேக கணிமை சேமிப்பகம் என்பது தரவு சேமிப்பின் இலத்திரனியல் தரவை தருக்க படலையில் (logical pools) சேமித்துவைத்திருக்கும் ஒரு தரவு சேமிப்பு மாதிரி ஆகும், இங்கு பௌதிக சேமிப்பகம் ஆனது பல்வேறு வழங்கிகள் (Servers) (அத்துடன் பல இடங்கள்) இங்கு வியாபித்திருக்கும். இதன் பௌதீக சூழல் ஒரு தொகுப்பான நிறுவனத்துக்கு உரிமையாயிருப்பதுடன் அதனால் முகாமைத்துவம் செய்யப்படும். மேக சேமிப்பகத்தை வழங்குபவர்கள் தரவுகளை கொண்டிருப்பதற்கும் அதனை நாம் பெறக்கூடியதாக இருப்பதற்கும் பொறுப்பானவர்கள். அத்துடன் பௌதீக சூழல் பாதுகாப்பனதாகவும் தொடர்ச்சியுள்ளதாக இருப்பதற்கும் அவர்களே பொறுப்பு. மக்களும், நிறுவனங்களும் வழங்குனர்களிடமிருந்து பயனர் சேமிப்பு , அமைப்புமுறை, பிரயோக தரவு போன்றவற்றிற்காக சேமிப்பக கொள்ளளவை வாங்குகின்றனர் அல்லது குத்தகை செய்கின்றனர்.

மேக சேமிப்பக சேவைகளை இணையாக அமைந்துள்ள மேக கணணி சேவை ஊடாக, ஒரு வலை சேவை செயலி நிரலாக்க இடைமுகம் (a web service API) அல்லது செயலி நிரலாக்க இடைமுகத்தை பயன்படுத்திய பயன்பாடுகள் (Applications), ஒரு மேகம் சேமிப்பு நுழைவாயில் அல்லது வலை அடிப்படையிலான உட்பொருள் மேலாண்மை அமைப்புகள் (content management systems) மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

வரலாறு[தொகு]

மேகக் கணிமை 1960களில் ஜோசப் கார்ல் லிக்லைடர்ரொ ப்னேட் ஆல் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அவரது 'அர்பாநெட் (ARPANET)' வேலையூடாக மக்ககளையும் தரவையும் தொடர்புபடுத்த இதனை அவர் மேற்கொண்டார்.

1983இல் கணணி பரிமாற்று (CompuServe) நிறுவனமானது தமது வாடிக்கையாளர்களை தாம் விரும்பும் கோப்புக்களை தரவிறக்கம் செய்யவும் சேமிப்பதற்காகவும் ஒரு சிறிய அளவு இடத்தை (disk space) வழங்கியது.

1994இல் AT&T நிறுவனம் தனிப்பட்ட அல்லது வர்த்தக மற்றும் தொழிலாண்மை தொடர்புகளை மேற்கொள்வதற்காக, ஒரு இணையதளத்துடன் இணைந்துள்ள நிலை (Online) தளத்தை உருவாக்கியது. அந்த சேமிப்பகமானது முழுவதும் இணைய அடிப்படையிலானது. நீங்கள் மின்னணு கூட்டம் நடத்தும் இடமாக மேகக் கணிமை இணை யோசிக்க முடியும். அமேசான் இணைய சேவைகள் (Amazon Web Services) தமது மேக சேமிப்பு சேவையான ANS S3 ஐ இல் 2006 அறிமுகப்படுத்தினார். இது SmugmugDropboxSynaptop மற்றும்  Pinterest போன்ற பிரபலமான சேவைகளுக்கு சேமிப்பக வழங்குனராக இருப்பதன் மூலம் பரந்துபட்ட அங்கீகாரத்தை பெற்றுள்ளது. 2005இல் Box ஒரு இணைய கோப்பு பகிர்வு மற்றும் தனிப்பட்ட மேக உள்ளடக்க முகாமைத்துவசேவையை வர்த்தகத்திற்கு அறிமுகம் செய்தது.

கட்டமைப்பு[தொகு]

ஒரு மேகக்கணி சேமிப்பிடத்தின் உயர் மட்ட கட்டமைப்பு.

தரவுகள் பரவலாக்கப்பட்டு பல இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளதால் உத்தரவின்றி தகவல்களை ஏனையவர்கள் பெறும் ஆபத்து இங்குள்ளது. உதாரணமாக வழங்கப்படும் சேவையைப் பொறுத்தே தரவு பிரதிபண்ணப்படும் தன்மை காணப்படுகிறது. cloud தரவேற்றம் (upload) செய்யும் முன் எழுத்துக்களால் ஆக்கப்படுகிறது.

மேக சேமிப்பகம் ஆனது:

 • பல விநியோகிக்கப்பட்ட வளங்களால் உருவாக்கப்படுகிறது ஆனால் ஒன்றாக செயல்படுகிறது, ஒரு சமஷ்டி அல்லது ஒரு கூட்டுறவு மேக சேமிப்பு கட்டமைப்பு ஆகும்
 • மிகைமை அல்லது தரவு விநியோகம் மூலம் உயர் தவறு சகிப்புத்தன்மை
 • பதிக்கப்பட்ட பிரதிகள் உருவாக்கம் மூலம் உயர் நீடித்ததன்மை

நன்மைகள்[தொகு]

 • நிறுவனங்கள் தாங்கள் உண்மையில் பாவிக்கும் சேமிப்பக கொள்ளளவுக்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும், பொதுவாக ஒரு மாதத்திற்க நுகர்வில் சராசரியை கொடுக்க வேண்டும். இதனால் மேகக்கணிமை என்பது விலைமதிப்பு குறைந்தது என்று அர்த்தமில்லை. இது மூலதன செலவுகளுக்கு மாறாக இயக்க செலவுகளை மட்டுமே அதிகமாக பெறுகிறது.
 • வணிகங்கள் மேகக்கணிமை தொழிநுட்பத்தை பயன்படுத்தி அதனுடைய சக்தி நுகர்வுகளை 70 சதவீதத்தால் குறைத்து அதனை மென்மேலும் குறைந்த எதிர்மறையான தாக்கத்தை உடைய சிறந்த ஒரு லாபகரமான வணிகமாக மாற்றுகின்றது. அதுமாத்திரமன்றி விற்பனையாளர் மட்டத்தில் அவர்கள் தனது வணிகதொடர்பினை உயர்மட்ட ஆற்றலுடன் கையாள்கின்றனர். ஆகவே தனது சொந்த செலவுகளை குறைத்து சிறந்த முறையில் முகாமைத்துவப்படுத்த தயாராகவுள்ளனர்.
 • மேகக்கணிமை வளங்கள் மற்றும் பயன்பாடுகள் ஒரு வலை சேவை இடைமுகம் வழியாக மற்றொரு அமைப்பின் உள்கட்டமைப்பை தொகுத்து ஒரு பரந்த அளவிலான உடனடியான பயனர்கள் அணுகலை வழங்குகின்றது.
 • மேகக்கணிமையானது இயற்கை பேரழிவு ஆதார காப்பாக பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் 2 அல்லது 3 காப்பு (backup) சேமிப்பு சேவையகங்கள் அமைந்துள்ளன.

வழங்குனர் ஸ்திரத்தன்மை[தொகு]

நிறுவனங்கள் நிலையானவையல்ல.அவற்றின் சேவைகள், உற்பத்திகள் மாற்றமடையலாம். ஒரு நிறுவனத்திற்கு வெளியில் உள்ள நிறுவனத்தில் (outsourcing) தரவுகளை சேமிக்கும் போது கம்பனியின் உறுதி தன்மை பற்றி  தீவிர விசாரணையின் பின் செய்யவேண்டும். உறுதியான நிறுவனங்கள் கூட இல்லாமல் போகும் அல்லது சூழ்நிலைகள் மாறும் போது பெறுமதியற்றதாகலாம்.

 1. வங்குறோத்து நிலையடையலாம்.
 2. விரிவடைந்து தமது குவியத்தை மாற்றலாம்.
 3. ஏனைய பெரிய நிறுவனங்களால் வாங்கப்படலாம்.
 4. ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைப் புறந்தள்ளும் நாடொன்றிலியங்கும் அல்லது அங்கு தலைமைச்செயலகத்தை மாற்றும் கம்பனியொன்றினால் வாங்கப்படலாம்.
 5. திரும்ப முடியாத பேரழிவினால் பாதிக்கப்படல்.

அணுகல்தன்மை[தொகு]

 • அயலாக்க சேமிப்பு செயல்திறன் ஆனது வாடிக்கையாளர் பெரும்பரப்பு வலையமைப்புகள்(WAN) அலைவரிசையை பொறுத்து உள்ளது. உள்ளக சேமிப்பை விட குறைவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
 • தரவு சேமிப்பகத்திற்க்கு  ஒரு பெரிய  இடத்தை வழங்குகிறது.

ஏனைய அக்கறைகள்[தொகு]

 • ஒரு மேகம் சேமிப்பக வழங்குநர் இடத்தில் முக்கிய தரவுகளை சேமிக்கும் போது, சேமிக்கப்படும் தரவு மற்றும் இடம்பெயர்வில் உள்ள தரவு பற்றி அக்கறை வேண்டும்.
 • மேக சேமிப்பக திருடர்களுக்கும் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் பெரியதொரு வளமாக காணப்படுகிறது. ஏனெனில் மேகம் சேமிப்பகத்தில் பல்வேறுபட்ட பயனாளிகள் மற்றும் நிறுவனங்களின் தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

 1. "A history of cloud computing" ComputerWeekly.
 2. Daniela Hernandez (May 23, 2014). "Tech Time Warp of the Week"Wired.
 3. "Box.net lets you store, share, work in the computing cloud". Silicon Valley Business Journal. December 6, 2009. Retrieved October 2, 2016
 4. "On-premises private cloud storage description, characteristics, and options" பரணிடப்பட்டது 2016-03-22 at the வந்தவழி இயந்திரம்.
 5.  A Cloud Environment for Data-intensive Storage Services.
 6. ZDNet, Nasuni Cloud Storage Gateway By Dan Kusnetzky, June 1, 2010, [3]
 7. "4 reasons why cloud and on-premises storage are different, but equally good for people data". 2013-09-09. Retrieved 2013-09-09.
 8. Subashini, S.; Kavitha, V. (2011-01-01). "A survey on security issues in service delivery models of cloud computing"Journal of Network and Computer Applications34 (1): 1–11. doi:10.1016/j.jnca.2010.07.006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக_சேமிப்பகம்&oldid=3878211" இலிருந்து மீள்விக்கப்பட்டது