உள்ளடக்கத்துக்குச் செல்

.இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
.lk
அறிமுகப்படுத்தப்பட்டது 1990
அ. ஆ. பெ. வகை Country code top-level domain
நிலைமை Active
பதிவேடு மொரட்டுவப் பல்கலைக்கழகம்
வழங்கும் நிறுவனம் Council for Information Technology
பயன்பாட்டு நோக்கம் இலங்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள் அல்லது நிறுவனங்கள்.

actualuse=இலங்கையில் ஓரளவு பிரபலமானது

பதிவு கட்டுப்பாடுகள் உள்ளூர் பிரச்சன்னம் தேவையானது; இந்தப் பெயரைப் பதிவுசெய்வதற்குரிய காரணங்கள் தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.; சில மூன்றாம் நிலைப் பெயர்கள் வகைரீதியாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன.
கட்டமைப்பு பதிவுகளை இரண்டாம் நிலையில் பதிவுசெய்யலாம் அல்லது மூன்றால் நிலையில் இரண்டாம் நிலையில் இருந்து மேற்கொள்ளலாம்.
ஆவணங்கள் பதிவு முறைகள் (Policy)
பிணக்கு கொள்கைகள் ஐ. டி. என். கொள்கை

website=nic.lk

வலைத்தளம் {{{website}}}

.இலங்கை (ஆங்கிலம்: .lk, சிங்களம்: .ලංකා) என்பது இலங்கைக்கான இணையத்தின் அதியுயர் ஆள்களப் பெயராகும். இந்த ஆள்களப் பெயரை இலங்கை ஆள்களப் பதிவகம் மூலம் பெறலாம். இந்த ஆள்களப் பெயர் 2010ஆம் ஆண்டு சூலை 22ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இலங்கையில் அல்லாத பன்னாட்டு நிறுவனங்கள் இதை பதிவுசெய்யவேண்டும் எனின் அவர்களிடம் இலங்கையில் ஒரு தொடர்பு முகவரி இருத்தல் வேண்டும் அல்லது முகவர்களூடாகவோ அல்லது சட்ட நிறுவனங்களூடாகவோ மேற்கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்

[தொகு]

இந்த ஆள்களப் பெயரானது தமிழ் மொழியிலே அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதனால் தமிழ் மொழியில் இணையத்தள முகவரிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. .இலங்கை என்னும் ஆள்களப் பெயருடன் அமையும் இணையத்தள முகவரிகளில் ஒருங்குறி எழுத்துரு பயன்படுத்தப்படுகின்றது.[2]

இரண்டாம் நிலை ஆள்களங்கள்

[தொகு]

கீழ்வரும் ஆள்களப் பெயர்கள் இலங்கையில் பாவனையில் உள்ளன.

கட்டுப்பாடுள்ளது

[தொகு]
  • .gov.lk - இலங்கையின் அரச திணைக்களங்களுக்கும் மற்றும் அரச இணையத்தளங்களும்.
  • ..sch.lk - இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகள்.
  • .net.lk - இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இணைய சேவை வழங்குநர்கள்.

கட்டுப்பாடற்றது

[தொகு]
  • .com.lk - வணிக நிறுவனங்கள்
  • .org.lk வர்த்தகரீதியில்லாத நிறுவனங்கள்.
  • edu.lk - கல்வி சார் இணையத்தளங்கள்
  • .ngo.lk - அரசு அல்லாத அமைப்புக்கள் (இலங்கைத் தமிழ்: அரச சார்பற்ற அமைப்புக்கள்)
  • .sco.lk - பதிவு செய்யப்பட்ட சமூகங்கள்.
  • .web.lk - இணையத்தளங்கள்.
  • .ltd.lk - பதிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்கள்.
  • .grp.lk - குழு அல்லது கூட்டு நிறுவனங்கள்.
  • .hotel.lk - உணவகம்/உறைவிடங்கள்.

எடுத்துக்காட்டுகள்

[தொகு]
  • எடியுலங்கா என்ற நிறுவனம் "எடியுலங்கா.இலங்கை எடியுலங்கா.இலங்கை"[3] என்ற தளத்தில் சேவைகளை வழங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. இலங்கை ஆள்களப் பதிவகம் (ஆங்கில மொழியில்)
  2. "ஐ. டி. என். கொள்கை-இலங்கை ஆள்களப் பதிவகம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2014-07-25. பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.
  3. எடியுலங்கா.இலங்கை www.எடியுலங்கா.இலங்கை எடியுலங்கா.இலங்கை பரணிடப்பட்டது 2018-10-08 at the வந்தவழி இயந்திரம்

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=.இலங்கை&oldid=3867568" இலிருந்து மீள்விக்கப்பட்டது