இலங்கை ஆள்களப் பதிவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கை ஆள்களப் பதிவகம்
நிறுவுகை1990 (1990)
தலைமையகம்இலங்கை ஆள்களப் பதிவகம், 545/1, டி சொய்சா வீதி, மோல்ப், மொரட்டுவை 10400, இலங்கை
சேவை வழங்கும் பகுதிஇலங்கை
இணையத்தளம்தளம்.ஆள்களமையம்.இலங்கை

இலங்கை ஆள்களப் பதிவகம் (ஆங்கிலம்: LK Domain Registry) என்பது ஒரு தன்னிச்சையான இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது இணையத்தில் இலங்கைக்கான தனித்துவத்தைக் கொடுக்கக்கூடிய இணையத்தளங்களை இலங்கைக்குரிய முதன் நிலை ஆள்களப் பெயர்களுடன் (.lk) பதிவுசெய்ய உதவுகிறது. இ்ந்த நிறுவனம் 1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானம் மற்றும் இயந்திரவியற் துறையில் இயங்கி வருகிறது.[1]

ஆள்களப் பெயர்கள்[தொகு]

.lk என்ற ஆள்களப் பெயருடன் .com.lk, .org.lk, .hotel.lk, .assn.lk, .ltd.lk, .web.lk, .soc.lk, .grp.lk முதலிய கட்டுப்பாடற்ற இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்களையும் .gov.lk, .sch.lk, .net.lk ஆகிய கட்டுப்பாடுள்ள இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்களையும் இலங்கை ஆள்களப் பதிவகம் வழங்கி வருகின்றது.[2] தமிழ் மொழியில் .இலங்கை என்ற ஆள்களப் பெயரையும் சிங்கள மொழியில் .ලංකා என்ற ஆள்களப் பெயரையும் இலங்கை ஆள்களப் பதிவகம் வழங்கி வருகிறது. இதன் மூலம் தமிழிலும் சிங்களத்திலும் இணையத்தள முகவரிகளைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]