அதியுயர் ஆள்களப் பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அதியுயர் ஆள்களப் பெயர் (Top-level domain), அல்லது உயர்நிலை ஆள்களப் பெயர் என்பது இணைய முகவரியில் உள்ள பின் இணைப்பை குறிக்கிறது. டொமைன் பெயர் முறைமை 1980 களில் உருவாக்கப்பட்ட போது, டொமைன் பெயர் வெளி களங்கள் இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஐஎஸ்ஓ-3166 தரப்பட்டியலில் உள்ள நாடுகளின்ன் சுருக்கங்களைக் கொண்ட நாட்டுக் குறியீடு ஆள் களப் பெயர்களும் (ccTLD), மற்றும் GOV, EDU, COM, MIL, ORG, NET, INT ஆகிய ஏழு அடிப்படை உயர்நிலை களங்களும் (gTLD) என இரண்டு குழுக்களாக அதியுயர் ஆள்களப் பெயர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.