உள்ளடக்கத்துக்குச் செல்

ஹென்றி தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹென்றி தீவு
ஹென்றி தீவு is located in மேற்கு வங்காளம்
ஹென்றி தீவு
புவியியல்
அமைவிடம்அரபிக்கடல்
தீவுக்கூட்டம்சுந்தரவனக்காடுகள்
நிர்வாகம்
இந்தியா
மக்கள்
மக்கள்தொகைnone

ஹென்றி தீவு (Henry's Island) என்பது இந்தியாவின் மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பக்காலிக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இது கொல்கத்தாவிலிருந்து 130 km (81 mi) தொலைவில் அமைந்துள்ளது.[1] இந்த தீவு மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகளின் தாயகமாகும்.

அணுகல்

[தொகு]

ஹென்றி தீவு கொல்கத்தாவில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ளது. நகரத்திலிருந்து வார இறுதிப் பயணத்திற்கு ஏற்ற இடமாக இது உள்ளது. விமானம், தொடருந்து மற்றும் சாலை வழியாக இங்கு செல்லலாம்.[2]

விமானம் மூலம்

[தொகு]

அருகில் உள்ள வானூர்தி நிலையம், கொல்கத்தாவின் பன்னாட்டு வானூர்தி நிலையமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

தொடருந்து மூலம்

[தொகு]

சீல்டா தொடருந்து நிலையத்திலிருந்து, நாம்கானா தொடருந்து நிலையத்தை அடைய லக்ஷ்மிகாந்தபூர் உள்ளூர் தொடருந்தில் பயணிக்கலாம். நாம்கானா தொடருந்து நிலையத்திலிருந்து பேருந்து அல்லது வாடகை வண்டியில் பக்காலியை அடையலாம். பக்காலியை அடைந்ததும் படகு மூலம் ஹென்றித் தீவினை அடையலாம்.

சாலை வழியாக

[தொகு]

சாலை வழியாகவும் ஹென்றி தீவை அடைய, வாடகை வண்டி மூலம் பயணிக்கலாம். மேலும் எஸ்பிளனேட் பேருந்து நிலையத்திலிருந்து பக்காலிக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்காலியை அடைந்தவுடன், ஹென்றி தீவை அடைய 20 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.

சிவப்பு நண்டுகளின் தாயகமான ஹென்றித் தீவு
ஹென்றி தீவு ஆகாய காட்சி
ஹென்றித் தீவில் கடற்கரை

மேற்கோள்கள்

[தொகு]
  1. De, Chirananda (2018-12-06). Mangrove Ichnology of the Bay of Bengal Coast, Eastern India (in ஆங்கிலம்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319992327.
  2. https://www.oyorooms.com/travel-guide/henry-island-travel-guide/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_தீவு&oldid=3438528" இலிருந்து மீள்விக்கப்பட்டது