உள்ளடக்கத்துக்குச் செல்

ஹரிஸ் சோகைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹரிஸ் சோகைல் (Haris Sohail (பிறப்பு: 9 சனவரி 1989) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை மட்டையாளரான இவர் இடதுகை கழல் திருப்பப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் சியல்கோட் ஸ்டாலியன்ஸ், சராய் தரகியாத்தி வங்கி லிமிடட் துடுப்பாட்ட அணி, சியல்கோட் துடுப்பாட்ட அணி மற்றும் பெஷாவர் சல்மி ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[1][2]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

பன்னாட்டு இருபது20

[தொகு]

2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. சூலை 28 இல் கிங்டவுனில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். மட்டையாட்டத்தில் 4 பந்துகளில் ஓர் ஓட்டங்களை எடுத்து பத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 11 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[3]

2018 ஆம் ஆண்டில் சூலை 5 இல் அராரேவில் நடைபெற்ற முத்தரப்பு பன்னாட்டு இருபது20 தொடரில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் இவர் சந்தித்த முதல் பந்திலேயே ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[4]

ஒருநாள் போட்டிகள்

[தொகு]

2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. சூலை 19 இல் கிராஸ் இஸ்லத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 36 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்து கீமர் ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

2018 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மற்றும் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.நவம்பர் 11 இல் துபாயில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் 59 பந்துகளில் 60 ஓட்டங்களை எடுத்து பெர்கூசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.[5]

தேர்வுத் துடுப்பாட்டம்

[தொகு]

2017 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 28 இல் அபுதாபியில் நடைபெற்ற முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 13 ஓவர்கள் பந்துவீசி 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 161 பந்துகளை சந்தித்த இவர் 76 ஓட்டங்களை எடுத்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 5 ஓவர்கள் வீசி 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 69 பந்துகளை சந்தித்த இவர் 34 ஓட்டங்கள் எடுத்து பெராரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[சான்று தேவை]

சான்றுகள்

[தொகு]
  1. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  2. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  3. "first match".
  4. "2018 vs n".
  5. "நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி".

வெளியிணைப்புகள்

[தொகு]

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ஹரிஸ் சோகைல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஸ்_சோகைல்&oldid=2760619" இலிருந்து மீள்விக்கப்பட்டது