ஹசனமா பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹசனமா பேட்டை இந்தியா, தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில், வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள ஓர் கிராமமாகும். இக்கிராமமானது காஞ்சிபுரம்-செய்யார் சாலையில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமம் முன்னர் தெய்வந்தாங்கள் என்று அழைக்கப்பட்டது.

பெயர்க்காரணம்[தொகு]

செய்யார் சட்டமன்றம் மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் இவ்வூர் அமைந்துள்ளது. இப்பெயர் வரக் காரணம்: ஹசன் + அம்மா + பேட்டை, இங்கு ஹசன் ஒரு இஸ்லாம் பெண் பெயர், அம்மா என்பது தாய் என்ற தமிழ் வார்த்தை மற்றும் பேட்டை என்பது தமிழ் வார்த்தை ஆகும். இந்த குறிப்பிட்ட கிராமம் மற்றும் நிலங்கள் மக்களுக்கு, ஹசனால் நன்கொடை அளிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, எனவே இவ்வூர் ஹசனமா பேட்டை என்று அழைக்கப்படுகிறது. இப்போதும் மக்கள் ஹசன் அவர்களின் நினைவாக, அவருக்கு முதல் மரியாதையை செலுத்திய பிறகே தங்கள் கடவுள்களை வணங்குகின்றனர்.

முக்கிய தொழில்[தொகு]

இந்த கிராமத்தில் நிறைய பாரம்பரியம் பிணைந்துள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலான மக்கள் பட்டு சேலை உற்பத்தியாளர்கள். உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டு சேலைகள் இறுதியாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

அமைப்பு[தொகு]

ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கோயில் உள்ளது, இந்த கிராமத்தில் 13 தெருக்களே உள்ளன.

திருவிழா[தொகு]

ஒவ்வொரு அம்மாவாசை நாளிலும் அங்காள அம்மன் ஊஞ்சலில் காட்சி அளிக்கிறாள். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில், ஏழு மற்றும் பத்தாம் நாட்களில் செவ்வாடையுடன் அங்கால அம்மன் அருள்பாலிப்பது மிகவும் புகழ்பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசனமா_பேட்டை&oldid=2549047" இருந்து மீள்விக்கப்பட்டது