ஹகா
ஹகா ஹகா | |
---|---|
![]() ஹகா | |
ஆள்கூறுகள்: 22°38′43.9476″N 93°36′18.129″E / 22.645541000°N 93.60503583°E | |
நாடு | ![]() |
மாநிலம் | சின் மாநிலம் |
மாவட்டம் | ஹகா மாவட்டம் |
நகராட்சி | ஹகா நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.50 sq mi (32.4 km2) |
ஏற்றம் | 6,128 ft (1,867 m) |
மக்கள்தொகை (2005) | |
• மொத்தம் | 35,000−40,000 |
• அடர்த்தி | 32,000/sq mi (34,000/km2) |
• Religions | Christian |
நேர வலயம் | MST (ஒசநே+6:30) |
ஹகா மியான்மரின் உள்ள சின் மாநிலத்தின் தலைநகரம். இந்நகரம் சின் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. நகரத்தின் வட்டார பெயர் ஹல்கா ஆகும். ஹகாவின் மொத்த பரப்பளவு 12.50 சதுர மைல்கள் (32.4 கிமீ 2) ஆகும். கடல் மட்டத்திற்கு மேலே 1,800 மீட்டர் (6,000 அடி) உயரத்தில் உள்ளது, இது ஒரு சிறிய மேட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ளது, மேலும் இது நிலப்பகுதியில் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், இது முழு மாநிலத்தின் தலைநகரமும் அதன் பீடபூமியையும் சின் மாநிலத்தில் உள்ள மற்ற நகரங்களை விட குறிப்பிடத்தக்க அளவு பெரியது. தற்போதைய ஹகா நகரம் இன்னும் பத்து மடங்கு விரிவடைய தேவையான நிலப்பரப்பும் மற்றும் முழுத் திறனும் கொண்டுள்ளது. சின் மாநிலம் மிகவும் மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால், ஹகா நகரம் ஒரு பெரிய மலைச் சரிவில் ஒரு கொண்டை ஊசி (U) வளைவு போல மலையில் கட்டப்பட்டுள்ளது. நகரத்தின் மையப்பகுதியில் ஓடும் ஒரே ஒரு சாலை, ஒரு கொண்டை ஊசி வளைவு U போல் உள்ளது, இந்த நகரம் முழுவதும் இந்த சாலையை ஒட்டியே கட்டப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Hakha". Ilovemyanmar.org. http://www.ilovemyanmar.org/chin%20state/hakha.html. பார்த்த நாள்: August 19, 2010.