ஸ்லெட்டா பிலிபோவிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்லெட்டா பிலிபோவிக்
Zlata Filipović
பிறப்பு3 திசம்பர் 1981 (1981-12-03) (அகவை 42)
சாரயேவோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா சோசலிச குடியரசு, யூகோஸ்லாவியாவின் சோசலிச கூட்டாட்சி குடியரசு
தொழில்நாட்குறிப்பு

ஸ்லெட்டா பிலிபோவிக் (Zlata Filipović, பிறப்பு 3 திசம்பர் 1980) [1] என்பவர் ஒரு போஸ்னிய-ஐரிய நாட்குறிப்பாளர். 1991 முதல் 1993 வரை நடந்த போஸ்னியப் போரின் போது போர்ச்சூழலில் சாரயேவோவில் இருந்தபோது இவர் ஒரு நாட்குறிப்பை எழுதி வைத்திருந்தார்.

இவரும் இவருடைய குடும்பமும் போரில் இருந்து தப்பித்து பாரிசுக்கு குடிபெயர்ந்தனர், அங்கு அவர்கள் ஒரு ஆண்டு வாழ்ந்தனர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஸ்லெட்டா பிலிபோவிக் வழக்கறிஞர் மற்றும் வேதியியலாளரின் ஒரே குழந்தையாவார். ஃபிலிபோவிக் நடுத்தர வர்க்க குடும்பத்தில் வளர்ந்தார். 1991 முதல் 1993 வரை, இவர் தனது நாட்குறிப்பில் போஸ்னியப் போரின் போது சரஜெவோ முற்றுகையின் கொடூரங்களைப் பற்றி எழுதினார். [2]

பிலிபோவிக்கும் அவரது குடும்பத்தினரும் உயிர் பிழைத்து 1993 இல் பாரிசுக்குத் தப்பிச் சென்றனர், அங்கு அவர்கள் ஒரு வருடம் தங்கினர். இவர் டப்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் கல்லூரியில் பயின்ற இவர் பின்னர், 2001 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மனித அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1995 அக்டோபர் முதல் அயர்லாந்தின் டப்ளினில் வசித்து வருகிறார். அங்கு டப்ளின் டிரினிட்டி கல்லூரியில் படித்தார். பிலிபோவிக் தொடர்ந்து எழுதினார். அவர் தி ஃப்ரீடம் ரைட்டர்ஸ் டைரி நூலுக்கு முன்னுரை எழுதினார். மேலும் ஸ்டோலன் வாய்ஸ்: யங் பீப்பிள்ஸ் வார் டைரிஸ், பிரம் வேல்ட்டு வார் ஒன் டூ ஈராக் என்ற தலைப்பிலான இளைஞர்களின் போர் நாட்குறிப்புகள் என்ற நூலை இணைந்து தொகுத்தார். இவர் 2006 நவம்பர் 19 அன்று டவுட் லெ மொண்டே என் பார்லே என்ற பேச்சு நிகழ்ச்சியின் கனடிய பதிப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார். [3] 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் அயர்லாந்தின் டப்ளினில் வசித்து வந்தார், ஆவணப்படம் மற்றும் பிற திரைப்படத் தயாரிப்புத் துறையில் பணியாற்றினார். [4]

படைப்புகள்[தொகு]

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
1992, 1993 ஸ்லாட்டாவின் நாட்குறிப்பு: சரஜெவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை 1992 இல் 45 பக்கங்கள் வெளியிடப்பட்டன
1999 சுதந்திர எழுத்தாளர்களின் நாட்குறிப்பு: ஒரு ஆசிரியரும் 150 பதின்வயதினரும் தங்களை மற்றும் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்ற எழுத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள் ஸ்லாட்டா பிலிபோவிக் எழுதிய முன்னுரை
2004 மிலோசெவிக்: மக்கள் கொடுங்கோலன் ஸ்லெட்டா பிலிபோவிக்கின் முன்னுரையும் மொழிபெயர்ப்பும்
2006 திருடப்பட்ட குரல்கள்: இளைஞர்களின் போர் நாட்குறிப்புகள், முதலாம் உலகப் போர் முதல் ஈராக் வரை ஸ்லாட்டா பிலிபோவிக் இணைந்து தொகுத்துள்ளார்
2009 மனசாட்சியின் குடியரசில் இருந்து: மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தால் ஈர்க்கப்பட்ட கதைகள் [5] கட்டுரை 4, "லாஸ்ட் இன் அரிசோனா" ஸ்லாட்டா பிலிபோவிக் எழுதியது
2010 குழப்பத்தில் கூட: அவசர காலத்தில் கல்வி அத்தியாயம் ஆறு, "எங்கள் குரல்களைக் கேளுங்கள்: மோதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அனுபவங்கள்" ஸ்லாட்டா பிலிபோவிக் எழுதியது

செயல்பாடுகள்[தொகு]

பிலிபோவிக் அயர்லாந்து பன்னாட்டு மன்னிப்பு அவையின் (2007-13) நிர்வாகக் குழுவில் இருந்தார். மேலும் இவர் போரினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் சமூக பிணையத்தின் (NYPAW) நிறுவன உறுப்பினர் ஆவார். [6] இவர் உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போர்களின் போது குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். மேலும் குழந்தைகள் மற்றும் சகிப்புத்தன்மைக்கான இளைஞர் இலக்கியத்திற்கான யுனெஸ்கோ நடுவர் மன்றத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் லாஸ் ஏஞ்சல்சில் (1994) சைமன் வைசென்டால் மையத்தின் சைல்ட் ஆஃப் கரேஜ் விருதைப் பெற்றவர்.[சான்று தேவை][ மேற்கோள் தேவை ]

தயாரிப்பு[தொகு]

குறும்படங்கள்[தொகு]

  • 2011: Stand up
  • 2012: Motion Sickness
  • 2013: Abacus
  • 2014: Stand up for your friends
  • 2016: OCD and Me
  • 2016: The Wake
  • 2017: James Vincent McMorrow: One Thousand Times
  • 2017: Bittersweet (documentary)
  • 2018: Johnny (documentary)
  • 2018: Villagers - Fool
  • 2019: Strong at the Broken Places

ஆவணப்படங்கள்[தொகு]

  • 2010: Blood of the Irish
  • 2011: Hold on Tight
  • 2012: Three Men Go to War
  • 2013: Here Was Cuba
  • 2014: Somebody to love
  • 2016: The Farthest
  • 2016: The Story of Yes

தொலைக்காட்சி[தொகு]

  • 2017: The Babymakers (ஆவணப்படத் தொடர்)
  • 2018: The Game: The Story of Hurling (ஆவணப்படத் தொடர்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Zlata chat பரணிடப்பட்டது 2007-11-18 at the வந்தவழி இயந்திரம், mv.com; accessed 7 March 2016.
  2. "Books of The Times; Another Diary of a Young Girl (Published 1994)". த நியூயார்க் டைம்ஸ்.
  3. Tout le monde en parle details, IMDb.com; accessed 7 March 2016.
  4. Bosnian diarist reflects on Radovan Karadžić verdict, Irishtimes.com, 24 March 2016; accessed 29 March 2016.
  5. From the Republic of Conscience: Stories Inspired by the Universal Declaration of Human Rights, irishtimes.com; accessed 29 March 2016.
  6. Error on call to வார்ப்புரு:cite press release: Parameter title must be specified

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்லெட்டா_பிலிபோவிக்&oldid=3821012" இலிருந்து மீள்விக்கப்பட்டது