ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
ശ്രീ നാരായണ ഗുരു ഓപ്പൺ സർവകലാശാല | |
வகை | பொதுவுடைமை |
---|---|
உருவாக்கம் | அக்டோபர் 2, 2020 |
வேந்தர் | கேரள ஆளுநர் |
அமைவிடம் | , இந்தியா |
வளாகம் | நகரப்பகுதி |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் கேரளா அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இது கேரள மாநிலத்தின் பதினான்காவது மாநில பல்கலைக் கழகமும் இந்தியாவின் பதினைந்தாவது திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் ஆகும். இந்த பல்கலைக்கழகம் பிராந்திய மையங்களையும் மற்றும் படன மையங்களையும் உள்ளடக்கி இதன் ஆட்சி நிலவரை வரம்பு கேரள மாநிலம் முழுவதும் கொண்டிருப்பதாகும். இந்த பல்கலைக் கழகத்தின் தோற்றுவிப்போடு கேரள மாநிலத்தின் தொலை தூர கல்வி வழங்கும் ஒரே பல்கலைக் கழகமாக இது உருவுற்றது, மற்றும் கேரளா பல்கலைக் கழகம், மகாத்மா காந்தி பல்கலைக் கழகம், கள்ளிக்கோட்டை பல்கலைக் கழகம், மற்றும் கண்ணூர் பல்கலைக் கழகத்தால் வழங்கப் பட்டு வந்த தொலைதூர கல்விகள் அனைத்தும் இந்த புதிய பல்கலைக் கழகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழும் நோக்கத்தின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகம் தலை சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் பெயர் சூட்டப்பட்டு கொல்லம் மாநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பாட்டுக்கு வந்தது. 25 செப்டம்பர் 2020 அன்று மாண்புமிகு கேரள மாநில ஆளுநரால் புறப்படுவிக்கப்பட்டு அமலுக்கு வந்த ஒரு சாசனத்தினால் இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதாகும். இது அக்டோபர் 2 , 2020 அன்று கொல்லத்தில் வைத்து நடந்த விழாவில் கேரள மாநில தலைமை அமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களால் முறையாக திறந்து வைக்கப்பட்டது.
பல்கலைக்கழக வேந்தர்
[தொகு]கேரள மாநில ஆளுநர் அவரின் பதவிவழிப் பயனாக இந்த பல்கலைக்கழக வேந்தர் ஆவார்.
பல்கலைக்கழக அலுவலர்கள்
[தொகு]சாசனத்தின் படி, பின்வருபவர்கள் பல்கலைக்கழக அலுவலர்கள் ஆவர்.
- துணை வேந்தர்
- உதவித் துணை வேந்தர்
- பதிவாளர்
- நிதி அலுவலர்
- தேர்வு கட்டுப்பாட்டாளர்
- மின்வெளி கட்டுப்பாட்டாளர்
- படனக் கல்விக்கூட இயக்குநர்
- பிராந்திய மையங்களின் இயக்குநர்
பல்கலைக்கழகத்தின் ஓர் அலுவலராக ஒரு மின்வெளி கட்டுப்பாட்டாளரைக் கொண்ட கேரளத்தின் முதல் பல்கலைக்கழகம் இதுவாகும்.
பல்கலைக்கழக அதிகார அமைப்புகள்
[தொகு]பின்வருவன பல்கலைக்கழக அதிகார அமைப்புகள் ஆகும்.
- ஆலோசனைக் கழகம்
- ஆட்சியக் கழகம்
- கல்விய ஆராய்ச்சி கழகம்
- நிதிக் கழகம்
- மின்வெளிக் கழகம்
- படனக் கல்விக்கூட வாரியம்
- படனக் கல்விக்கூட இயக்குநர்கள் கழகம்
படனக் கல்விக்கூடங்கள்
[தொகு]பல்கலைக்கழகம் பின்வரும் படனக் கல்விக்கூடங்களை கொண்டிருக்க வேண்டியது:
- மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் கல்விக்கூடம்
- அறிவியல் கல்விக்கூடம்
- மொழிகள் கல்விக்கூடம்
- சட்டம், வணிகப் படனங்கள் மற்றும் வளர்ச்சிப் படனங்கள் கல்விக்கூடம்
- தகவல்தொடர்பு மற்றும் தகவல் அறிவியல்கள் கல்விக்கூடம்
- பல்துறைமை மற்றும் பன்முகத்துறைமை படனக் கல்விக்கூடம்
- தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கல்விக்கூடம்