ஸ்ரீ கங்கம்மா தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ கங்கம்மா தேவி கோயில் (Sri Gangamma Devi Temple) என்பது கர்நாடகாவின் பெங்களூரு நகரின் வடமேற்கு பகுதியில், மல்லேசுவரம் லேஅவுட், 2வது கோயில் தெருவில் காடு மல்லேசுவர கோயில்அருகே அமைந்துள்ளது

கோயிலின் முக்கிய தெய்வம் கங்கம்மா அல்லது கங்கா தேவி ஆவார். இவர், பூமியில் கங்கை நதியாகவும் சக்தியின் அவதாரமாகவும் தோன்றியதாகக் கருதப்படுகிறது.

கோவில் வரலாறு[தொகு]

இந்தியாவில் ஒரு பிரபலமான தெய்வமாக, கங்கம்மா வழிபாடு நடைபெறுகிறது. மேலும், கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் உள்ளூர் தெய்வமாக வழிபாடு நடைபெறுகிறது. ஆண்டுதோறும் கங்கம்மா ஜாத்ரே எனப்படும் திருவிழா இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. பெங்களூரில் இந்த நிகழ்வு 1928 ஆம் ஆண்டு முதல் மல்லேஷ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்படுகிறது [1]

2004 ஆம் ஆண்டு கங்கை அம்மனுக்கு நிரந்தரக் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கோவிலில் உள்ள மற்ற சன்னதிகள்[தொகு]

இந்த கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்ரமணியர் மற்றும் நவக்கிரகங்களுக்கான சிறிய சன்னதிகளும் உள்ளன

வருடாந்திர கங்கம்மா ஜாத்ரே[தொகு]

ஒரு 'ஜாத்ரா' அல்லது 'ஜாத்ரே' என்பது தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு துறவிகள் ஒன்றிணைந்து, உள்ளூர் தெய்வங்களின் நினைவாக நடத்தப்படும் வருடாந்திர மத கண்காட்சி மற்றும் திருவிழா ஆகும். சவுந்தட்டி எல்லம்மா கோயிலில் உள்ள எல்லம்மா ஜாத்ரே, நாயக்கனஹட்டி திப்பெருந்திர சுவாமி கோவிலில் உள்ள நாயக்கனஹட்டி ஜாத்திரை போன்றவை இந்த நிகழ்விற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

பெங்களூரில் உள்ள கங்கம்மா ஜாத்ரே 1928 முதல் ஒரு பாரம்பரியமாக நடந்து வருகிறது, தற்போது இந்த திருவிழா மல்லேஸ்வர கங்கம்மா கோவிலை சுற்றி நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வு பொதுவாக மூன்று நாட்களுக்கு நடைபெறும். இத் திருவிழாவைக் காண பெங்களூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதைக் காணலாம். திருவிழா நேரத்தில், கோயிலும் தெய்வமும் சிறப்பாக அலங்கரிக்கப்படுகிறது. பக்தர்கள் பாரம்பரிய மலர்கள், தேங்காய் மற்றும் பழங்களுடன் ராகி கஞ்சியையும் தேவிக்கு அர்ப்பணிக்கிறார்கள்.

பிரபலமான கலாச்சாரத்தில்[தொகு]

TV9 (கன்னடம்)இன் ஹீகு உண்டே எனப்படும் தொலைக்காட்சி தொடரின் ஒரு பகுதியில் கங்கம்மா தேவி கோவில் ஆவணப் படமாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A village fair in the heart of city". பார்க்கப்பட்ட நாள் 28 August 2016.