உள்ளடக்கத்துக்குச் செல்

காடு மல்லேசுவர கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காடு மல்லேசுவரர் கோயில்
காடு மல்லேசுவர கோயில் is located in Bengaluru
காடு மல்லேசுவர கோயில்
பெங்களூருவில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கர்நாடகம்
மாவட்டம்:பெங்களூரு
அமைவு:மல்லேசுவரம்
ஆள்கூறுகள்:13°00′18″N 77°34′17″E / 13.004966°N 77.5714462°E / 13.004966; 77.5714462
கோயில் தகவல்கள்

காடு மல்லேசுவரர் கோயில் (Kadu Malleshwara Temple)(கன்னடம்: ಕಾಡು ಮಲ್ಲೇಶ್ವರ) என்பது கி. பி. 17ஆம் நூற்றாண்டு இந்துக் கோயில் ஆகும். இந்தியாவின் கருநாடகம் மாநிலம், பெங்களூரு, மல்லேசுவரம் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

[தொகு]

17ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சிவாஜியின் சகோதரரான வெங்கோஜியால் திராவிட கட்டிடக்கலை பாணியில் இக்கோயில் கட்டப்பட்டது.[1] சிவன் இங்கு மல்லிகார்ஜுனன் என்று போற்றப்படுகிறார். இக்கோயிலின் ஒரு பகுதியாக நந்தீஸ்வர தீர்த்த கோயிலாக (பசவ தீர்த்தம்) இக்கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இக்கோயில் அருகே விருசாபாவதி ஆற்றின் பிறப்பிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

திருவிழா

[தொகு]

இந்த கோயிலின் முக்கிய ஆண்டு விழாவாக மகா சிவராத்திரி உள்ளது. இந்த கோவிலின் பெயரிலேயே இந்தப் பகுதி மல்லேசுவரம் என்று இடம் அழைக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dasharathi, Poornima. "A whiff of Malleswaram". Citizen Matters. பார்க்கப்பட்ட நாள் 20 October 2012.
  2. "Temples of Malleshwaram – Venugopal Swamy, Kaadu Malleshwara and Sai Baba Temple". Archived from the original on 23 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 October 2012.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=காடு_மல்லேசுவர_கோயில்&oldid=3785905" இலிருந்து மீள்விக்கப்பட்டது