ஸ்ரீராம் ராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீராம் ராகவன்
ஒரு திரைப்பட விருது வழங்கும் விழாவில் இராகவன், 2019
பிறப்பு22 சூன் 1963 (1963-06-22) (அகவை 60)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2004-தற்போது வரை

ஸ்ரீராம் ராகவன் (Sriram Raghavan) (22 சூன் 1963) இவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிகிறார்.[1] வெற்றிகரமான சில மர்ம கதைகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற இவர், இந்தியத் தொடர் கொலையாளி ராமன் ராகவ் பற்றிய 45 நிமிட ஆவணபுனை கதையைத் தயாரித்தவரும், 2004 ஆம் ஆண்டில் ராம் கோபால் வர்மா தயாரித்த 2004 இந்தி திரைப்படமான ஏக் ஹசீனா தி இயக்கியவரும் ஆவார். இவரது இரண்டாவது திரைப்படம் 2007-ஆம்ஆண்டில் வெளிவந்த ஜானி கடார் ஆகும்.[2]அவரது சமீபத்திய படம் அந்ததுன்(2018), சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதை வென்றதோடு மட்டுமல்லாமல் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிகரமான படமாக அமைந்தது. இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டின் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இவர் புனேயில் வளர்ந்தார், அங்கு புனித வின்சென்ட் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பினை முடித்தார். புனேவில் உள்ள பெர்க்குசன் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார்.

இவர் புனேயில் உள்ள இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஆவார்.[4] இவரது கல்லூரியின் சகாவான ராஜ்குமார் கிரானி,பட்டயப் படிப்பிற்கான தி எய்ட் காலம் அஃபேர் என்ற படத்திற்கு படத்தொகுப்பினைச் செய்தார். இத்திரைப்படம் தேசிய விருதினை 1987 ஆம் ஆண்டில் வென்றது.[1] இவர் சி.ஐ.டி என்ற இந்திய தொலைக்காட்சித் தொடர் மற்றும் 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த வார் என்ற திரைப்படம் ஆகியவற்றின் எழுத்தாளரான ஸ்ரீதர் ராகவனின் சகோதரரும் ஆவார்.[5]|

தொழில்[தொகு]

ராகவன் புனே, இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் சேருவதற்கு முன்பு தனது தொழில் வாழ்க்கையை ஸ்டார் டஸ்ட் பத்திரிக்கையில் தொடங்கினார். ஆனால், இவர் இதில் ஆர்வம் இல்லாததால் வெளியேறினார். தனது படிப்பை முடித்துவிட்டு, ரகுவீர் யாதவ் உடன் ராமன் ராகவ் என்ற ஆவணப்படத்தை உருவாக்கினார். ராகவன் பின்னர் மற்றொரு த்ரில்லர் திரைப்படம் ஜானி கடாரை இயக்கினார், இது நீல் நிதின் முகேஷின் அறிமுகத் திரைப்படமாக அமைந்தது. இந்தப் படம் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், விமர்சகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Profile: Kiss Kiss, Bang Bang, But Slowly". Tehelka Magazine, Vol 5, Issue 22. 7 June 2008. Archived from the original on 5 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூலை 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "Thanking the Stars". இந்தியன் எக்சுபிரசு. 26 May 2008 இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130122160045/http://www.expressindia.com/latest-news/thanking-the-stars/314564/. 
  3. Sen, Raja (20 February 2015). "Review: Badlapur is a dark, unflinching, fantastic film". ரெடிப்.காம். http://www.rediff.com/movies/review/review-badlapur-is-a-dark-unflinching-fantastic-film/20150220.htm. 
  4. "Urmila is not emotionally disturbed". Rediff.
  5. "BONUS: Q&A with Sriram and Sridhar Raghavan".
  6. "Johnny Gaddaar - Movie - Box Office India". boxofficeindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீராம்_ராகவன்&oldid=3793003" இலிருந்து மீள்விக்கப்பட்டது