ஸ்பெல்ட்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஸ்பெல்ட் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. spelta[1]
|
இருசொற் பெயரீடு | |
Triticum spelta L. |
ஸ்பெல்ட் (Spelt இத்தாலியில்,Farro செர்மனியில் Dinkle) என்ற தானியம் கோதுமை போன்றதே. கோதுமையின் மூதாதையினரிடமிருந்து ஸ்பெல்டாக மாறியது. இதூ கோதுமையின் நெருங்கிய உறவினர். கோதுமையைவிட சற்று நீளமாகவும், கூர்முனைகளைக் கொண்டும், சிவப்பு நிற குளிர்கால கோதுமைபோல இருக்கும் இதனைக் குளிர்காலத்தில் அறுவடை செய்வர். இதன் மீதான உமியானது மிகவும் அடர்த்தியாக இருக்கும். இதனால் பூஞ்சையாலும் பூச்சிகளாலும் பாதிக்கப்படாது. இதனால் பூச்சிமருந்து அடிக்கப்படுவதில்லை. குறைவாக அடிக்கப்படுவதும் உண்டு.
வரலாறு
[தொகு]சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்பெல்டை மக்கள் உணவாக உட்கொண்டனர். இந்த தானியத்தைப் பற்றிப் விவிலியம் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. ஸ்பெட்டின் தாயகம் மெசபடோமியா (ஈரான்). ஸ்வீஸ் நாட்டவர்கள் அமெரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்தபோது உடன் இந்தத் தானியங்களை எடுத்துச் சென்று பயிரிட்டனர். ஆரம்பத்தில் கால்நடைப் பயிராகவே ஸ்பெல்ட் பயிரிடப்பட்டது.
உணவுப்பயிராக
[தொகு]1890க்கு பின்னரே ஸ்பெல்ட் உணவுதானியமாக மாறியது. கோதுமைக்கு மாற்றாகக் கடைகளில் விற்கத் துவங்கியதும் இதன் மதிப்பு உயர்ந்தது. இத்தானியத்தில் கோதுமையைவிட 20 விழுக்காடு புரோட்டின் உள்ளது. மேலை நாடுகளில் ஸ்பெட்டை ஒரு இயற்கை உணவாக அறிமுகம் செய்துள்ளனர்.
உசாத்துணை
[தொகு]- தானியங்கள், (மின்னூல்), ஏற்காடு
- தானியங்களைப் பற்றிய மின்னூல் (தமிழ்)