உள்ளடக்கத்துக்குச் செல்

இசுப்புட்னிக் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்புட்னிக் 3 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்புட்னிக் 3
Sputnik 3
இயக்குபவர்சோவியத் ஒன்றியம்
முதன்மை ஒப்பந்தக்காரர்கோரோலேவ் வடிவமைப்பு நிலையம்
திட்ட வகைபுவி அறிவியல்
செயற்கைக்கோள்பூமி
சுற்றுப்பாதைகள்~10,000
ஏவப்பட்ட நாள்மே 15, 1958 at 07:12:00 UTC
ஏவுகலம்ஸ்புட்னிக் 8ஏ91
திட்டக் காலம்692 நாட்கள்
Orbital decayஏப்ரல் 6, 1960
தே.வி.அ.த.மை எண்1958-004B
இணைய தளம்NASA NSSDC Master Catalog
நிறை1,327 கிகி
சுற்றுப்பாதை உறுப்புகள்
அரைப் பேரச்சு7418.7 கிமீ
சுற்றுப்பாதையின் வட்டவிலகல்.110932
சாய்வு65.18°
சேய்மைநிலை1,864 கிமீ
அண்மைநிலை217 கிமீ
சுற்றுக்காலம்105.9 நிமிடங்கள்
கருவிகள்
மேல் வளிமண்டலம் : மேல் வளிமண்டலத்தின் அமைப்பு
கீகர் எண்ணிகள் : மின்னேறிய துகள்கள்
நுண்விண்கல் உணர்கருவிகள் : நுண்விண்கற்கள்


சுபுட்னிக் 3 என்பது ஒரு சோவியத் செய்மதி ஆகும். இது 1958 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் பைக்கோனர் (Baikonur) ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இது வளிமண்டலத்தின் மேற்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஒரு ஆய்வுச் செய்மதி ஆகும். ஒலிப்பதிவுக் கருவியில் பழுது ஏற்பட்டதால், வான் அலென் கதிர்வீச்சுப் பட்டையை (Van Allen radiation belt) இது உணரத் தவறிவிட்டது.


1956 ஜூலை மாதத்தில் புவியைச் சுற்றி ஒரு செயற்கை மதி ஒன்றை வலம்வரச் செய்யும் திட்டம் சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட போது, இந்த ஸ்புட்னிக் 3 என்று பின்னர் பெயரிடப்பட்ட செய்மதியே முதலாவதாக ஏவப்படுவதாக இருந்தது. ஸ்புட்னிக் 3 தயாராகும் முன்பே அதனை ஏவுவதற்கான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையான ஆர்-7 தயார் நிலையில் இருந்தது. ஆனால் செய்மதி வேலை நிறைவு பெறாமல் காலம் தாழ்ந்து வந்தது. இதனால் சேர்கே கொரோலேவ் (Sergei Korolev) ஒப்பீட்டளவில் எளிமையான ஸ்புட்னிக் 1 ஐ முதல் செய்மதியாகச் செலுத்த முடிவு செய்தார். சுபுட்னிக் 2 உம் முன்னரே செய்து முடிக்கப்பட்டதால் அது இரண்டாவதாகச் செலுத்தப்பட்டது. சுபுட்னிக் 3 முடியும் வரை காத்திருந்தால், முதல் செய்மதியை ஏவிய நாடு என்ற பெயரை அமெரிக்கா தட்டிக்கொண்டு போய்விடும் என்று கோரோலேவ் பயந்தார்.


சுபுட்னிக் ஒரு தானியங்கி அறிவியல் சோதனைக் கூட விண்வெளியோடம் ஆகும். கூம்பு வடிவில் அமைக்கப்பட்ட இதன் உயரம் 3.57 மீட்டரும், அடி விட்டம் 1.73 மீட்டரும் ஆகும். இது 1,327 கிகி நிறை உடையதாக இருந்தது. இதில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள், வளிமண்டலத்தின் மேற்புறம் பற்றிய பல தகவல்களை அனுப்பின. மேல் வளிமண்டலத்தின் அமுக்கம் மற்றும் அதன் அமைப்பு, மின்னேற்றம் கொண்ட துகள்களின் செறிவு, அண்டக் கதிர்களில் உள்ள பார அணுக்கருக்கள், காந்த மற்றும் மின்நிலையியல் புலங்கள், விண்கல் துகள்கள் என்பன குறித்த தகவல்கள் இவற்றுள் அடங்கும். புவியின் வெளிக் கதிர்வீச்சுப் பட்டைகள் இப் பறப்பின்போது உணரப்பட்டன. இவ் விண்வெளியோடம் 1960 ஏப்ரல் 6 ஆம் திகதிவரை சுற்றுப்பாதையில் இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுப்புட்னிக்_3&oldid=2916645" இலிருந்து மீள்விக்கப்பட்டது