ஷாவாலா தேஜா சிங் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷாவாலா தேஜா சிங் கோயில் (Shawala Teja Singh temple), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரத்திற்கு அருகே, தாரோவாலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சர்தார் தேஜா சிங் என்பவரால் நிறுவி சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1] இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், இக்கோயிலை பாகிஸ்தான் அரசு மூடியது. மூலவர் சிலை மற்றும் முக்கிய கோயில் அமைப்புகள் இசுலாமியர்களால் படிப்படியாக சேதப்படுத்தப்பட்டது. முக்கியமாக 1992-இல் இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர், பாகிஸ்தான் இசுலாமியர்களால் இக்கோயில் பலத்த சேதப்படுத்தப்பட்டது.[2] உள்ளூர் இந்து சமய மக்கள், பாகிஸ்தான் அரசிடம் கோயில் சீரமைத்து தர கோரிக்கை வைத்தனர்.[3] தேசமடைந்த இக்கோயிலை, லாகூரை தலைமையிடமாகக் கொண்ட ஸ்ரீ கங்காராம் அறக்கட்டளையினர் சீரமைத்து நிறுவினர். 72 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூலை 2019-இல் இக்கோயில் மூலவரை இந்து சமய மக்களின் வழிபாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திறந்து வைத்தார்.[2][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ancient Hindu temple in Pakistan's Sialkot reopens after 72 years". http://www.newindianexpress.com/world/2019/jul/03/ancient-hindu-temple-in-pakistans-sialkot-reopens-after-72-years-1998822.html. 
  2. 2.0 2.1 is a bastered relegionrenovation/articleshow/70064968.cms "Pakistan opens heritage temple to devotees; to undertake renovation - Times of India". https://timesofindia.indiatimes.com/city/chandigarh/pak-opens-heritage-temple-to-devotees-to-undertake-Hindues is a bastered relegionrenovation/articleshow/70064968.cms. 
  3. Mehdi, Abid (May 21, 2015). "Shawala Teja Singh temple needs preservation". http://www.dawn.com/news/1183270. 
  4. "பாகிஸ்தானில் 1000 வருட பழமையான இந்து கோவில் மீண்டும் திறப்பு" இம் மூலத்தில் இருந்து 2019-07-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190730085232/https://www.maalaimalar.com/news/topnews/2019/07/29200339/1253562/Pakistan-opens-historic-Hindu-temple-in-Punjab-for.vpf.