ஷமிம் ஆசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷமிம் ஆசாத்
இயற்பெயர்
শামীম আজাদ
பிறப்புஷமிம் ஆசாத்
11 நவம்பர் 1952 (1952-11-11) (அகவை 71)
மைமன்சிங், டாக்கா, கிழக்கு வங்காளம்]] (now வங்காளதேசம்)
தொழில்கவிஞர், கதைசொல்லி, எழுத்தாளர்
மொழிவங்காள மொழி, ஆங்கிலம்
தேசியம்வங்காளதேசத்தவர்
குடியுரிமைபிரித்தானியர்
கல்வி நிலையம்குமுதினி கல்லூரி
தாக்கா பல்கலைக்கழகம்
செயற்பட்ட ஆண்டுகள்1988–தற்போது வரை
துணைவர்செலிம் ஜஹான்
பெற்றோர்அபு அக்மத் முக்மத் தரப்தர் (தந்தை)
அனோவரா கனொம் (தாய்)

ஷமிம் ஆசாத் ( Shamim Azad  ; பிறப்பு 11 நவம்பர் 1952) [1] வங்காளதேசத்தில் பிறந்த பிரித்தானிய இருமொழி கவிஞரும், கதைசொல்லியும், எழுத்தாளரும் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

ஷமிம் கிழக்கு வங்காளத்தில் (இப்போது வங்காளதேசம் ) தந்தை பணிபுரிந்த மைமன்சிங்கில் பிறந்தார் . ஆனால் இவரது சொந்த ஊர் சில்ஹெட் இவர் 1967 இல் ஜமால்பூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். 1969 இல் தங்கைல் குமுதினி கல்லூரியில் தனது இடைநிலைப் படிப்பை முடித்தார். பின்னர், டாக்கா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1972 இல் பட்டம் பெற்றார்.

1990ல் இங்கிலாந்தில் குடியேறி[2] ரெட்பிரிட்ஜில் உள்ள வான்ஸ்டெட்டில் வசிக்கிறார்.[3]

தொழில்[தொகு]

ஷமிமின் படைப்புகளில் வங்காளதேசம் முதல் ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகள் வரை கருப்பொருளாக உள்ளன. இவரது செயல்திறன் கல்வி மற்றும் பொழுதுபோக்கிற்கு இடையேயான கோடுகளை இணைக்கிறது. மேலும், இவரது பட்டறைகள் ஆசிய நாட்டுப்புற, வாய்வழி மரபுகள் மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளன.[4]

ஆங்கிலம் மற்றும் பெங்காலி ஆகிய இரு மொழிகளில் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் உட்பட 37 புத்தகங்களை [5] வெளியிட்டுள்ளார் மேலும் பிரித்தானிய சௌத் ஆசியன் பொயட்ரி, மை பர்த் வாஸ் நாட் இன் வெயின், வெலாசிட்டி, எம்லிட் புராஜெக்ட் மற்றும் மொதெர் டங்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர் ஹாஃப் மூன் நாடக நிறுவனத்திக்கு இரண்டு நாடகங்களையும் எழுதினார்.[6] இவர் இசையமைப்பாளர்களான ரிச்சர்ட் பிளாக்ஃபோர்ட், கெர்ரி ஆண்ட்ரூ, நடன இயக்குனர் ரோஸ்மேரி லீ, காட்சி கலைஞர் ராபின் வைட்மோர் மற்றும் நாடக ஆசிரியர் மேரி கூப்பர் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார்.[5]

ஆசாத் 1994 இல் வெங்காளதேசத்தின் "பிசித்ரா விருது", 2000 இல் லண்டன் ஆர்ட்ஸின் "இயர் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்" விருது, 2004 இல் "சோன்ஜோஜோன்- ஏ ரூஃப்" விருது மற்றும் 2004 இல் ஐக்கிய ராச்சியத்தின் "சிவிக் விருது" , கேனரி வார்ஃப் குழு பிஎல்சியால் 2014 இல் சமூக சாம்பியன்கள் விருதுஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[7] 2016 ஆம் ஆண்டில், பங்களா அகாடமியால் வழங்கப்பட்ட " சையத் வலியுல்லா இலக்கிய விருதும்" 2016 இவருக்கு வழங்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. "World Literature Centre, London". 11 November 2011. Archived from the original on 3 January 2012. பார்க்கப்பட்ட நாள் 23 January 2012. Upcoming Events
  2. "Biographical notes – The Poets". Poetry Magazines. 2001. pp. 293–305. பார்க்கப்பட்ட நாள் 23 January 2012. Shamim Azad
  3. "Shamim Azad – Artists directory". Tower Hamlets Arts & Entertainment. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.
  4. "Poetry and Translation". London: The Poetry Society. Archived from the original on 19 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 23 September 2011. The Poets: Shamim Azad
  5. 5.0 5.1 Karim, Mohammed Abdul; Karim, Shahadoth (October 2013). British Bangladeshi Who's Who. British Bangla Media Group. பக். 62. http://www.bbwhoswho.co.uk/images/whos-who-2013.pdf. பார்த்த நாள்: 1 September 2014. 
  6. Karim, Mohammed Abdul; Karim, Shahadoth (October 2009). British Bangladeshi Who's Who. British Bangla Media Group. பக். 33. http://www.bbwhoswho.co.uk/whoswho_09.pdf. பார்த்த நாள்: 24 September 2011. 
  7. Mahboob, Mahdin (12 August 2007). "Creative Writing Workshop @ BRAC University by Shamim Azad". The Daily Star. http://www.thedailystar.net/campus/2007/08/02/feature_BRAC.htm.  Volume 2, Issue 31

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷமிம்_ஆசாத்&oldid=3925744" இலிருந்து மீள்விக்கப்பட்டது