உள்ளடக்கத்துக்குச் செல்

வ. உ. சிதம்பரம் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வ. உ. சிதம்பரம் கல்லூரி
V. O. Chidambaram College
குறிக்கோளுரைLove, Knowledge and Virtue
அன்பு, அறிவு, அறம்
வகைஅரசு நிதியுதவிக் கல்லூரி
உருவாக்கம்1951; 73 ஆண்டுகளுக்கு முன்னர் (1951)
சார்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
முதல்வர்முனைவர் சி. வீரபாகு
அமைவிடம்
மொழிதமிழ்/ஆங்கிலம்
இணையதளம்[www.voccollege.ac.in]

வ. உ. சிதம்பரம் கல்லூரி (V.O. Chidambaram College) (பொதுவாக வ. உ. சி கல்லூரி என்று அறியப்படுகிறது) என்பது ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இது தமிழ்நாட்டின், தூத்துக்குடியில் அமைந்துள்ளது. இக்கல்லூரியானது 1951ஆம் ஆண்டில் குலபதி ஐ. பி. சி வீரபாகுவால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவினால் 12 (பி) மற்றும் 2 (எஃப்) கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இக்கல்லூரியானது இளங்கலை, முதுகலைப் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது. வ. உ. சிதம்பரம் கல்விச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் இந்த கல்லூரி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவு மாணவர்களுக்கு உயர் கல்வியை வழங்குகிறது.

உருவாக்கம்

[தொகு]

முதல் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் துவங்கியவரும், விடுதலைப் போராட்ட வீரரான வ. உ. சிதம்பரம்பிள்ளையின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் 1945ஆம் ஆண்டில், ஒரு குழு அமைக்கப்பட்டது. அக் குழுவில் பின்வரும் பரோபகாரர்கள் இருந்தனர்:

திரு. எம். வி. சுந்தரவேல் (தலைவர்)

திரு. ஏ. பி. சி வீரபாகு (செயலாளர்)

திரு. எம். வெங்கடகிருஷ்ணன் (உறுப்பினர்)

திரு. எம். சி வீரபாகு (உறுப்பினர்)

திரு. பி. கந்தசாமி (உறுப்பினர்)

குழு உறுப்பினர்களாக, எம். வெங்கடகிருஷ்ணன், எம். சி. வீரபாகு பி. கந்தசாமி ஆகியோர் இருந்தனர்.

மறைந்த விடுதலைப் போராட்ட வீரர் "செக்கிழுத்த செம்மல்", வ. உ. சிதம்பரம் பிள்ளைக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க இந்தக் குழு முதலில் யோசித்தது. எனவே ஒரு நகர மண்டபம் அல்லது நூலகத்தை அமைக்க உத்தேசித்து இருந்தது. அந்த நேரத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தரான டாக்டர் ஏ. எல். முதலியார் அவர்கள், தமிழகம் முழுவதிலும் உள்ள பரோபகாரர்களிடம் கல்லூரிகள் இல்லாத பகுதிகளில் கல்லூரிகளைத் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த செய்தியால் தூண்டப்பட்ட, திரு. ஏ. பி. சி. வீரபாகு மக்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆண்களுக்கான ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவுவதற்கான யோசனையை முன்வைத்தார்.

முதலில், இந்த முன்மொழிவுக்கு குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்களிடமிருந்து தயக்கமான பதில் கிடைத்தது. ஆனால் திரு. ஏ. பி. சி. வீரபாகு அவர்களின் ஆலோசனையூ உடனடியாக பாரட்டிய விடுதலைப் போராட்ட வீரரும், சட்டமன்ற உறுப்பினருமான எம். சி. வீரபாகு புதியதாக ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவ தனது முழு ஆதரவையும் வழங்கினார். இதன் பிறகு மற்ற உறுப்பினர்களும் முழு மனதுடன் ஒப்புதல் அளித்தனர். இதன் பிறகு வ. உ. சிதம்பரம் கல்விச் சங்கம் உருவானது.

1946ஆம் ஆண்டில், வ. உ. சிதம்பரம் நினைவு நிதி திரட்டல் தொடங்கப்பட்டது. இந்த பாராட்டத்தக்க நடவடிக்கையை புகழ்பெற்ற அரசியல்வாதி சக்கரவர்த்தி ராஜாஜி ஆசிர்வதித்தார். அதன்பிறகு தூத்துக்குடியையும் அதனைச் சுற்றியுள்ள ஏழைகளின் மாணவர்களின் நலனுக்காக அவர்களுக்கு உயர் கல்வியை வழங்குவதற்காக வ. உ. சி கல்விச் சங்கமானது 1947 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

தோற்றம்

[தொகு]

பல தடைகளைத் தாண்டிய பிறகு, அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பி. குமரசாமி ராஜா 1947 இல் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போதைய மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற, இக்கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பு படிப்புகள் தொடங்கப்பட்டன. வெளி மாணவர்களுக்காக வளாகத்திற்குள் கட்டப்பட்ட மூன்று தங்கு விடுதிகள் உட்பட மொத்தம் ஐந்து விடுதிகள் அமைக்கப்பட்டன.

இக்கல்லூரிஆனது 1966 ஆம் ஆண்டில், புதிதாக உருவாக்கப்பட்ட மதுரை பல்கலைக்கழகத்துடன் (இன்றைய மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்) இணைவுபெற்றது. 1966க்குப் பிந்தைய காலகட்டத்தில், ஆங்கிலம் மற்றும் வேதியியல் போன்ற பல பிரிவுகளில் முதுகலைப் படிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் இக்கல்லூரியானது முதுகலை மையமாக உருவெடுத்தது. அந்த நேரத்தில், இந்த கல்லூரி மாணவர்களின் பலத்தின் அடிப்படையில் பல ஆண்டுகளாக மதுரை பல்கலைக்கழக பகுதியில் மிகப்பெரிய கல்லூரியாக இருந்தது. கருத்தரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த வசதியாக கல்லூரியில் கலையரங்கம் மற்றும் நேர்த்தியான ஆடுகளம் போன்றவற்றைக் கொண்ட ஒரு மைய மண்டபம் பின்னர் கட்டப்பட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._உ._சிதம்பரம்_கல்லூரி&oldid=3631155" இலிருந்து மீள்விக்கப்பட்டது