வைபவ் கவுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைபவ் கவுல்
Vaibhav Kaul
பிறப்பு1991
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், செஃப்பீல்ட் பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம்
பணிபுவியியலாளர்
அறியப்படுவதுமலை ஆராய்ச்சி, காட்சிக் கலை

வைபவ் கவுல் (Vaibhav Kaul) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புவியியலாளராவார். இமயமலைப் புவியியலாளர், சுற்றுச்சூழல் அறிஞர், புகைப்படக் கலைஞர் மற்றும் ஓவியர் என இவருக்கு பன்முகங்கள் உண்டு. [1] [2] வைபவ் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், செஃபீல்டு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் சுற்றுச்சூழல் மாற்றம் நிறுவனத்தின் முன்னாள் மாணவர் ஆவார். இராயல் புவியியல் சங்கம் மற்றும் இராயல் ஆசியாடிக் சங்கம் போன்றவற்றில் உறுப்பினர் தகுதியைப் பெற்றிருந்தார்.

வளிமண்டல அறிவியல், புவி உருவியல் பற்றிய ஆய்வுகளுடன் மனிதப் புவியியல் மற்றும் கலாச்சார மானுடவியல் ஆகியவற்றை ஒருங்கிணைக்க கவுல் புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தினார். இந்தியாவின் பனிமூடிய உயர் மலை பகுதிகளான லாகால், கர்வால், குமாவோன் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக சுற்றுச்சூழல் மாற்றத்தையும் பேரழிவு இடர்களையும் ஆய்வு செய்துள்ளார். [3] [4] [5] [6] இவரது இயற்கை நிலக்காட்சி, காட்சி புவியியல் மற்றும் காட்சி இனவியல் படைப்புகள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. [7] [8]

இமயமலையில் மாற்றம், ஆபத்து, நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சி பற்றிய தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு ஆவணப்படமான மலையை எதிர்கொள்ளல் (ஃபேசிங் தி மவுண்டனை ) படத்தை உருவாக்க இவர் திரைப்பட இயக்குனர் இராசு ஆரிசனுடன் இணைந்து ஆலோசித்தார்.[9] 2017 ஆம் ஆண்டு ஒரு விழிப்புணர்வு (அன் அவேக்கனிங் ) மற்றும் 2018 ஆம் ஆண்டு காலத்தின் சிறைச்சாலையில் பனிப்பந்துகளுடன் விளையாடுவது ( பிளேயிங் வித் சுனோபால்சு இன் தி பிரிசன் ஆப் டைம்) என்ற இரண்டு கலைப்படங்களில் தோன்றினார் இந்த இரண்டு கவித்துவமான ஆங்கிலோ-இமாலயப் படங்களிலும் ஒளிப்பதிவாளர் இயான் சேடனுடன் இணைந்து வைபவ் பணியாற்றினார்.[10] [11] [12] [13] [14] [15] இமயமலையில் நிகழும் சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை எடுத்துக்காட்டும் வகையில் கவுல் மேற்கொண்ட புவியியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டின் விருது பெற்ற மவுண்டன், பிரீசுட்டு, சன் ஆகிய படங்களிலும் கவுல் மற்றும் செடோன் இணைந்து பணியாற்றினர். [16] [17] [18] [19] [20] [21] [22]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kaul, V.; Thornton, T.F. (2014). "Resilience and adaptation to extremes in a changing Himalayan environment". Regional Environmental Change 14 (2): 683–698. doi:10.1007/s10113-013-0526-3. 
  2. "Adaptation of Remote High-mountain Communities to Hydrometeorological Extremes and Associated Geohazards in a Changing Climate". The University of Sheffield. 2019. பார்க்கப்பட்ட நாள் 22 February 2019.
  3. Kaul, V. (2019). "Holistically understanding and enhancing the adaptation of remote high-mountain communities to hydrometeorological extremes and associated geohazards in a changing climate". White Rose: University of Sheffield, 258 pp. 
  4. "Unnatural Disaster: How Global Warming Helped Cause India's Catastrophic Flood". Yale Environment 360. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.
  5. "Kedarnath debris flow disaster". American Geophysical Union Blogosphere. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.
  6. "High up in the Himalayas, villagers live under the shadow of an unpredictable lake". Earth Island Journal. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  7. "A remarkable photo of Kedarnath after the debris flow disaster". American Geophysical Union Blogosphere. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.
  8. "Photostorm: Women and their many worlds". PARI. பார்க்கப்பட்ட நாள் 22 June 2015.
  9. "Festival Schedule: Facing the Mountain (Harrison and Kaul, 2016)". New York Indian Film Festival 2017. Archived from the original on 14 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Official Selection: An Awakening (UK, 2017)". Kendal Mountain Festival 2017. Archived from the original on 1 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "5 ° Festival Internacional de Cine de la Paz 2018 Cortometrajes: An Awakening". La Paz International Film Festival, Bolivia. பார்க்கப்பட்ட நாள் 19 November 2017.
  12. "Best of Calcutta International Cult Film Festival: Golden Fox Awards 2019". TalenTown Magazine. பார்க்கப்பட்ட நாள் 1 June 2020.
  13. "Official Selection 2018: An Awakening (Foreign Shorts)". Canadian Diversity Film Festival, Toronto. Archived from the original on 29 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 November 2017.
  14. "ShAFF 2019 Official Selection: Playing with Snowballs in the Prison of Time". Sheffield Adventure Film Festival. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  15. "Best Experimental Short Film 2018: Playing with Snowballs in the Prison of Time". Chhatrapati Shivaji International Film Festival. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
  16. "'Mountain, Priest, Son': Himalayan ethnographic documentary". Festival of the Mind 2018. Archived from the original on 5 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "Learning on Screen Awards: Winners 2019". British Universities and Colleges Film and Video Council. பார்க்கப்பட்ட நாள் 30 May 2019.
  18. "Learning on Screen Awards: Meet the Nominees". British Universities and Colleges Film and Video Council. Archived from the original on 15 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 30 May 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  19. ""Горы, священник, сын", Индия" (PDF). Echo BRICS Film Festival. Archived from the original (PDF) on 5 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  20. "PhD student wins international film prize with documentary Mountain, Priest, Son". University of Sheffield. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.
  21. "Official Selection 2018: Mountain, Priest, Son". Ooty Film Festival. Archived from the original on 5 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  22. "Best Documentary Short Film: Mountain, Priest, Son". South Film and Arts Academy Festival, Chile. பார்க்கப்பட்ட நாள் 30 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைபவ்_கவுல்&oldid=3592105" இலிருந்து மீள்விக்கப்பட்டது