வைணவ குழூஉக்குறி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வைணவ குழூஉக்குறி, அல்லது வைணவ பரிபாசை என்பது வைணவத் தமிழர்களுக்கிடையே வழங்கி வரும் தமிழ் வழக்கு. சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
- இறைவன் - பெருமாள்.
- இறைவி - தாயார், பிராட்டி, நாச்சியார்
- கருடன் - பெரிய திருவடி.
- ஆஞ்சநேயர் - சிறிய திருவடி.
- பூஜை செய்தல் - திருவாராதனம்.
- நாமம் - திருமண்
- நாமம் இடுதல் - திருமண் காப்பு தரித்தல்.
- துளசி - திருத்துழாய்.
- ஏலக்காய் - பரிமள திரவியம்.
- வெற்றிலைப் பாக்கு - அடைக்காய்
- அபிஷேகம் - திருமஞ்சனம்
- பாடல் பெற்ற தலம் - மங்களாஸாசனம் பெற்ற கோயில்.
- பிரசாதம் படைத்தல் - அமுது பண்ணுதல்.
- பாயசம் - திருக்கண்ணலமுது.
- ரஸம் - சாற்றமுது (சாத்தமுது).
- கேசரி - ஜீரா
- புளியஞ்சாதம் - புளியோதரை
- தயிர் சாதம் - ததியோன்னம்.
- வடை - திருப்பணியாரம்.
- சாதம் - ப்ரஸாதம்.
- பரிமாறுதல் - சாதித்தல்.
- உடம்பு சௌக்யமா? - திருமேனி பாங்கா?
- தண்ணீர் - தீர்த்தம்.
- குளித்தல் - தீர்த்தமாடுதல்.
- சாமி கும்பிடுதல் - பெருமாளை சேவித்தல்
- மரணம் - ஆச்சாரியன் திருவடி அடைதல்
- பிரபந்தம் ஓதுதல் - சாற்றுமறை (அ) சாற்றுமுறை
- ஆண்பிள்ளை - நம்பி
- பெண்பிள்ளை - நங்கை