வைணவ குழூஉக்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைணவ குழூஉக்குறி, அல்லது வைணவ பரிபாசை என்பது வைணவத் தமிழர்களுக்கிடையே வழங்கி வரும் தமிழ் வழக்கு. சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

  • இறைவன் - பெருமாள்.
  • இறைவி - தாயார், பிராட்டி, நாச்சியார்
  • கருடன் - பெரிய திருவடி.
  • ஆஞ்சநேயர் - சிறிய திருவடி.
  • பூஜை செய்தல் - திருவாராதனம்.
  • நாமம் - திருமண்
  • நாமம் இடுதல் - திருமண் காப்பு தரித்தல்.
  • துளசி - திருத்துழாய்.
  • ஏலக்காய் - பரிமள திரவியம்.
  • வெற்றிலைப் பாக்கு - அடைக்காய்
  • அபிஷேகம் - திருமஞ்சனம்
  • பாடல் பெற்ற தலம் - மங்களாஸாசனம் பெற்ற கோயில்.
  • பிரசாதம் படைத்தல் - அமுது பண்ணுதல்.
  • பாயசம் - திருக்கண்ணலமுது.
  • ரஸம் - சாற்றமுது (சாத்தமுது).
  • கேசரி - ஜீரா
  • புளியஞ்சாதம் - புளியோதரை
  • தயிர் சாதம் - ததியோன்னம்.
  • வடை - திருப்பணியாரம்.
  • சாதம் - ப்ரஸாதம்.
  • பரிமாறுதல் - சாதித்தல்.
  • உடம்பு சௌக்யமா? - திருமேனி பாங்கா?
  • தண்ணீர் - தீர்த்தம்.
  • குளித்தல் - தீர்த்தமாடுதல்.
  • சாமி கும்பிடுதல் - பெருமாளை சேவித்தல்
  • மரணம் - ஆச்சாரியன் திருவடி அடைதல்
  • பிரபந்தம் ஓதுதல் - சாற்றுமறை (அ) சாற்றுமுறை
  • ஆண்பிள்ளை - நம்பி
  • பெண்பிள்ளை - நங்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைணவ_குழூஉக்குறி&oldid=2784635" இலிருந்து மீள்விக்கப்பட்டது