வேலவன் செந்தில்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலவன் செந்தில்குமார்
Velavan Senthilkumar
தேசம் இந்தியா
வசிப்பிடம்சென்னை, இந்தியா
பிறப்பு26 மார்ச்சு 1998 (1998-03-26) (அகவை 25)
சேலம், இந்தியா
உயரம்1.78 m (5 ft 10 in)
எடை63 கிலோகிராம்கள் (139 lb)
ஓய்வு பெற்றமைவிளையாடுகிறார்
விளையாட்டு(கள்)இடது கை
பயிற்சியாளர்சைரசு போஞ்சா
பயன்படுத்தப்படும் மட்டைஇழை
ஆண்கள் ஒற்றையர்
அதி கூடிய தரவரிசைதரம். 101 (நவம்பர் 2021)
தற்போதைய தரவரிசைதரம். 101 (நவம்பர் 2021)
தலைப்பு(கள்)1
இறுதிச் சுற்று(கள்)3
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: செப்டம்பர் 2021.

வேலவன் செந்தில்குமார் (Velavan Senthilkumar) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழில்முறை சுவர்ப்பந்தாட்ட வீரர் ஆவார். 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள சேலம் நகரில் இவர் பிறந்தார். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சுவர்ப்பந்தாட்ட விளையாட்டில் 101ஆவது உலகத் தரவரிசையை அடைந்தார்.[1][2]

2016 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் சுவர்ப்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றியாளராகத் திகழ்ந்தார். அமெரிக்காவின் விசுகொன்சின் மாநிலத்தின் தலைநகரமான மேடிசனில் நடைபெற்ற போட்டியில் இவர் தனது முதலாவது பி.எசு.ஏ. பட்டத்தை வென்றார்.

செந்தில்குமார் தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவராகவும், ஆண்கள் சுவர்ப்பந்து விளையாட்டு அணியில் உறுப்பினராகவும் உள்ளார். 2022ஆம் ஆண்டில் பட்டப் படிப்பை முடிக்க உள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Velavan Senthikumar". PSA World Tour. 22 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Squash Info | Velavan Senthilkumar | Squash". www.squashinfo.com. 2020-07-01 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Velavan Senthilkumar - Men's Squash". Columbia University Athletics (ஆங்கிலம்). 2020-07-01 அன்று பார்க்கப்பட்டது.