வெ. இறையன்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இறையன்பு ஐ.ஏ.எஸ்

தமிழ்நாடு முழுவதும் இலக்கிய ஆர்வமுடைய அனைவராலும் அறியப்பட்ட வெ. இறையன்பு தமிழ்நாடு அரசில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 30 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.[1]

இளமைக் காலம்[தொகு]

இவர் 1963 செப்டம்பர் 16 ம் தேதி பிறந்தார். சேலம் காட்டூரைச் சேர்ந்த இவர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

கல்வி[தொகு]

 • இளங்கலை
  • பி. எஸ். சி. (வேளாண்மை)
 • முதுகலை
  • எம். ஏ. (தொழிலாளர் மேலாண்மை)
  • எம். எஸ். சி. (உளவியல்)
  • எம். எஸ். சி.(சமஸ்கிருதம்)
  • எம். பி. ஏ. (ஹிந்தி)
 • முனைவர்
  • வர்த்தக நிர்வாகம்

பதவிக் காலம்[தொகு]

வருடம் முதல் வருடம் வரை வகித்த பதவி
1990 1994 துணை ஆட்சியர் (நில வருவாய்த் துறை)
1994 1995 துணை செயலாளர், பண்பாட்டு துறை
1995 1996 இணை ஆணையர், நகர்புற வளர்ச்சி
1996 1996 இயக்குநர்,தகவல் மற்றும் ஒலிபரப்பு
1996 1997 ஆலோசகர்,ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (யுனிசெப்)
1997 1997 இயக்குநர்,தகவல் மற்றும் ஒலிபரப்பு
1997 1999 காஞ்சிபுரம் ,ஆட்சியர்
1999 1999 இயக்குநர்,சுற்றுல்லாத்துறை
1999 2001 துணை செயலாளர்,பணியாளர்கள் & பொது நிர்வாகம்
2001 2006 ஆணையர்,இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (ஈ.டி.ஐ), மதுரை
2007 2010 செயலாளர்,சுற்றுல்லாத்துறை
2010 2013 செயலாளர்,சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
2013 2013 முதன்மை செயலர் மற்றும் ஆணையர்,சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
2013 2014 இயக்குனர்,அண்ணா மேலாண்மை நிறுவனம்
2014 முதன்மை செயலர் மற்றும் ஆணையர்,பொருளாதாரம் மற்றும் புள்ளியல்துறை

நன்றி :NIC [2]

தமிழ் இலக்கியப்பணி[தொகு]

தமிழ் இலக்கியப் பற்றுடையவர், தமிழில் பல நூல்களை எழுதியிருப்பதுடன் பட்டிமன்றங்களில் நடுவராகவும் பங்கேற்று சிறப்புப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய வாய்க்கால் மீன்கள் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[3]

ஊடகத்தில் பங்கு[தொகு]

 • 1988, ஜூலை 8 - மாலை முரசு - ஐ.ஏ.எஸ்.தேர்வில் சாதனை படைத்தது எப்படி
 • 1996, மே 25 - தினமணி - தமிழ்க்குடும்பம்
 • 1997, அக்டோபர் 7 - தினமணி, மணல் கடத்தலை தடுக்க அதிரடி நடவடிக்கை
 • 1997, நவம்பர் - நக்கீரன் வார இதழ் - கலெக்டர் இறையன்புக்கு வெடிகுண்டு மிரட்டல்
 • 1997, நவம்பர் 16 - கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்கள் பள்ளியில் சேர்ப்பு
 • 1997, நவம்பர் 19 - தினமலர் - சிறார்களை வேலைக்கு அமர்த்த பட்டுத் தறி உரிமையாளர்கள் தயக்கம்
 • 1998, ஏப்ரல் - அதிகார வர்க்கம் அசமந்தமாகிவிட்டது - இதையம் பேசுகிறது
 • 1998, ஜுன் - கர்நாடக மனசைத் தொட்ட காஞ்சி நிலவொளி - ஆனந்த விகடன்
 • 1998, ஜூலை - ஆனந்த விகடன் தேடுவதை நிறுத்தினேன்...
 • 1998, நவம்பர் - ஆனந்த விகடன்- குளம்
 • 1998, பிப்ரவரி - கட்சிகளைவிட கலெக்டர் பாப்புலர் - தமிழன் எக்ஸ்பிரஸ்
 • 1998, மே - ஆனந்த விகடன் - நூல்களில் இருந்து தப்பி நூல்களுக்கு
 • 1998, மே - இதையம் பேசுகிரது - மக்கள் பார்வையில்
 • 1999 - மே, நக்கீரன் - இறை அன்புக்கு கிடைத்த பரிசு
 • 1999, பிப்ரவரி 14 - போவோமா பொன்னேரிக்கரை - தினமணிக்கதிர்
 • 1999, மார்ச் - தராசு வார இதழ் - ஐ.ஏ.எஸ் அம்பலம்
 • 2000, அக்டோபர் - குங்குமம் - திரும்பி பார்க்கிறேன்
 • 2000, ஆகஸ்ட் - விண்நாயகன் - மீனவ நண்பன்
 • 2000, ஆகஸ்ட் - இது என்னுடைய சாதனை அல்ல
 • 2001மார்ச் 22 - தினமணிக்கதிர் - தரையிலே கிடப்பதா வாழ்க்கை ?
 • 2002 - நவம்பர் 5, இறையன்புவின் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் - காலைக்கதிர்
 • 2003, June 15, The Hindu - Youth potential should not go waste
 • 2003, டிசம்பர் 15 - மாலை முரசுகுஜராத் பூகம்ப பகுதியை சீரமைத்த சேலம் அதிகாரி
 • 2003, நவம்பர் - ஆனந்த விகடன் வார இதழ் - கொட்றாங்க.. கொட்றாங்க...
 • 2004, September 8, The Hindu - Chicken soup for the soul, anybody ?
 • 2004, ஆகஸ்ட் - கல்கி - கம்பனில் எம்.பி.ஏ
 • 2004, ஜனவரி - ஆனந்த விகடன்நம்ம ராசா வந்திருக்காருல...
 • 2004, ஜூலை - அமுதசுரபி, வேளாண்மையில் மேலாண்மை
 • 2006, மே 14 - அறிவை நம்புங்கள் - தமிழ் முரசு
 • 2007, ஏப்ரல் - ஆனந்த விகடன் வார இதழ் - முதல் தலைமுறை
 • 2007, ஏப்ரல் - புத்தம் புதிய சாவிகள் - நமது நம்பிக்கை
 • 2007, மார்ச் - ஆனந்த விகடன் வார இதழ் - சுற்றுலா என்பது செலவு அல்ல
 • 2007, மார்ச் - ஆனந்த விகடன் - வி.ஐ.பி. கேள்விகள்
 • 2008 - ஜூலை - குமுதம், மயிரிழையில் உயிர் தப்பினேன்
 • 2009, ஜூலை - குங்குமம் வார இதழ் - மனவிலாசம்
 • 2009, பிப்ரவரி - பாக்கியா வார இதழ் - அன்புள்ள அம்மா
 • 2009, மார்ச் - அமுதசுரபி மாத இதழ் - நேர்காணல்
 • 2009, மார்ச் - சுற்றுலாவை மேம்படுத்தும் பணியில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு - அமுதசுரபி
 • 2010, July 26, 2010 - India Today - Action Heros
 • 2010, ஜுன் - சன்டே இந்தியன் - வெளிநாட்டுக்கு குடையும் தமிழ்க் கூரையும்
 • 2010, டிசம்பர் - குமுதம் வார இதழ் - காலம் தாண்டி எழுதிய கடிதம்
 • 2010, டிசம்பர் - இலக்கிய பாடலாசிரியர்
 • 2010, மார்ச் - குமுதம் வார இதழ் - சமீபத்தில் படித்த புத்தகம் - அரசு பதில்கள்
 • Women auto drivers in S.Artcot soon - Indian Express
 • எங்கள் கிராமத்து கலெக்டர்
 • ஞாபக சக்தியை மேம்படுத்த குறுக்கு வழிகள் இல்லை
 • நாலு எம்.எல்.ஏ.க்களும் நடுங்காத கலெக்டரும் - நெற்றிக்கண்
 • புகையில்லா அடுப்பு தயாரிக்க 30 பெண்களுக்கு பயிற்சி

தொலைக்காட்சியில் பங்கு

 • தந்தி தொலைக்காட்சியில் ஒரு கப் உற்சாகம் என்ற நிகழ்ச்சி
 • பொதிகை தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10:30 மணிக்கு "ஒவ்வொரு நொடியும் உன்னதம்" என்ற நிகழ்ச்சி

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

 1. வாய்க்கால் மீன்கள்
 2. ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
 3. ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
 4. ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)
 5. ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)
 6. சின்னச் சின்ன வெளிச்சங்கள்
 7. சின்னச் சின்ன மின்னல்கள்
 8. உள்ளொளிப் பயணம்
 9. ஏழாவது அறிவு (முதல் பாகம்)
 10. ஏழாவது அறிவு (இரண்டாம் பாகம்)
 11. ஏழாவது அறிவு (மூன்றாம் பாகம்)
 12. முகத்தில் தெளித்த சாரல்
 13. மென்காற்றில் விளை சுகமே!
 14. ஆத்தங்கரை ஓரம்
 15. அரிதாரம்
 16. படிப்பது சுகமே!
 17. பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்
 18. வேடிக்கை மனிதர்கள்
 19. நரிப்பல்
 20. அழகோ அழகு
 21. பனிப் பண்பாடு
 22. வாழ்கையே ஒரு வழிபாடு
 23. சிற்பங்களை சிதைக்கலாமா
 24. சாகவரம்
 25. வேடிக்கை மனிதர்கள்
 26. புனாத்தி
 27. வைகை மீன்கள்
 28. நெஞ்சை தொட்டதும் சுட்டதும்
 29. சரூக்கு மரம்
 30. பத்தாயிரம் மைல் பயணம்
 31. திருப்பாவை திறன்
 32. RANDOM THOUGHTS
 33. உன்னோடு ஒரு நிமிடம்

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. http://indiatoday.intoday.in/story/venkatachalam-irai-anbu/1/105623.html
 2. http://persmin.nic.in/ersheet/MultipleERS.asp?HiddenStr=01TN031700
 3. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.

வெ. இறையன்பு இ. ஆ. ப - http://www.iraianbu.in/

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._இறையன்பு&oldid=2496995" இருந்து மீள்விக்கப்பட்டது