வெள்ளால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளால்
வெள்ளாலின் இலைகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஃபை. பெஞ்சமினா
இருசொற் பெயரீடு
ஃபைக்கஸ் பெஞ்சமினா
லின்.

வெள்ளால் (Ficus benjamina) ஃபைக்கஸ் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது, தெற்காசியாவையும், தென்கிழக்காசியாவின் தென் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியா வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கின் அதிகாரபூர்வ மரம் இதுவேயாகும். இயற்கையான நிலைமைகளில் இம்மரம் 30 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. கவர்ச்சியான முறையில் தொங்கிய நிலையில் இருக்கும் சிறு கிளைகளில் 6-13 சமீ நீளம் உள்ள பளபளப்பான இலைகள் காணப்படுகின்றன. இவ்விலைகள் ஏறத்தாள நீள்வளைய வடிவில் அமைந்து கூரான முனையுடன் கூடியவையாக இருக்கின்றன. இதன் சிறிய பழங்கள் சிலவகையான பறவைகளுக்கு உணவாகின்றன.

வளர்ப்பு[தொகு]

வெப்பவலயப் பகுதிகளில் வெள்ளால், பூங்காக்களிலும், சாலையோரங்கள் போன்ற வேறு நகர் சார்ந்த இடங்களிலும், பெரிதாக வளர்ந்து காணப்படுகின்றன. இது பொதுவாக இத்தகைய அழகூட்டும் தாவரமாகவே வளர்க்கப்பட்டு வருகிறது. மிதவெப்பப் பகுதிகளில் இத் தாவரம் வீட்டில் வளர்ப்பதற்காகப் பெரிதும் விரும்பப்படுகிறது. வளர்வதற்குரிய சாதகமற்ற நிலைமைகளைத் தாங்கிக்கொள்ளும் தன்மையும், அழகிய தோற்றமுமே இதற்குக் காரணமாகும். பிரகாசமான சூரிய ஒளியில் இது சிறப்பாக வளரக்கூடியது எனினும், குறிப்பிடத்தக்க அளவில் நிழலையும் தாங்கிக் கொள்ளக்கூடியது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளால்&oldid=1396577" இலிருந்து மீள்விக்கப்பட்டது