வெல்வெட் நெற்றிப் பசையெடுப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Sitta|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
வெல்வெட் நெற்றிப் பசையெடுப்பான்
மலேசியாவின் சபாவில், கண்ணுக்கு மேலேயும் பின்புறமும் கரும் புருவக்கோடுடன் கூடிய ஆண்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Sitta
இனம்:
இருசொற் பெயரீடு
Sitta frontalis
Swainson, 1820

வெல்வெட் நெற்றிப் பசையெடுப்பான் ( Velvet-fronted nuthatch ) என்பது சிட்டிடே என்ற நுதாட்ச் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் கிழக்கே தெற்கு சீனா மற்றும் இந்தோனேசியா வரை தெற்காசியாவில் காணப்படுகிறது. இது மற்ற பசையெடுப்பான்களைப் போலவே, இது மரத்தின் பட்டைகளில் உள்ள பூச்சிகளை உண்கிறது. இவற்றுக்கு உள்ள வலுவாக நகங்கள் கொண்ட கால்விரல்கள் மரங்களில் தொற்றி ஏற, கிடைமட்டமாக கிளைகளின் அடிப்பகுதிக்கு செல்ல ஏற்றதாக உள்ளன. இவை மரங்கள் நிறைந்த காடுகளில் காணப்படுகின்றன. மேலும் இப்பறவைகள் பெரும்பாலும் மற்ற பறவைக் கூட்டங்களுடன் சேர்ந்து உணவு தேடுகின்றன. முதிர்ந்த ஆண் பறவைகளுக்கு கண்ணின் மேல் பிடரிவரை ஒரு கரும் புருவக் கோடு செல்வதைக் கொண்டு ஆண்பறவையை பிரித்து அறியலாம். இவை சிறு குரலில் கத்தியபடி இரைத் தேடக்கூடியவை. இவை பெரும்பாலும் மரங்கொத்திகள் அல்லது குகுகுறுவான்களால் உருவாக்கப்பட பொந்துகளில் இனப்பெருக்கம் செய்கின்றன.

விளக்கம்[தொகு]

வெல்வெட் நெற்றிப் பசையெடுப்பான் பறவை குறுகிய வால், ஆற்றல் வாய்ந்த அலகு மற்றும் கால்களைக் கொண்டுள்ளது. இது 12.5 செமீ நீளம் கொண்டது. இதன் உடலின் மேற்பகுதி ஊதா கலந்த நீலமாக இருக்கும். இளஞ்சிவப்புக் கன்னங்கள், பழுப்பு நிற அடிப்பகுதி, மஞ்சள் நிற கண்கள், வெண்மையான தொண்டை போன்றவற்றுடன் இருக்கும். விழிப்படலம் தெளிவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அலகு சிவப்பு நிறத்தில் இருக்கும் மேலும் நெற்றியில் ஒரு கருப்புத் திட்டு காணப்படும். இது முதிர்ந்த பறவைகளுக்கு நன்கு வளர்ந்திருக்கும் இளம் பறவைகளுக்கு குறைவாக இருக்கும். இளம் பறவைகள் கருமையான அலகு மற்றும் வாலடியின் கருமையான முனைகளைக் கொண்டுள்ளன. முதிர்ந்த ஆண் பறவைகளின் தலையில் கண்ணுக்கு மேல், முதுகு நோக்கி செல்லும் கரும் புருவக் கோட்டைக் கொண்டு தனித்து அறியலாம்.

பெண் ஆண் பறவையை ஒத்து கரும் புருவக் கோடின்றி இருக்கும். [2]

வகைபிரித்தல்[தொகு]

ஸ்வைன்சனின் 1820 விளக்கம்

இதில் சுமார் ஐந்து துணையினங்களாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, ஆனால் சில மரபுவழிசார் இனங்களாகக் கருதப்படலாம்: [3]

  • S. f. frontalis Swainson, 1820 - இந்த துணையின வடிவம் தென்னிந்தியாவின் மலைக்காடுகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகள், கிழக்கு தொடர்ச்சி மலைகள், மத்திய இந்திய காடுகள், இலங்கையில் காணப்படுகின்றன. இமயமலையில் உள்ள பறவைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இமயமலைப் பறவைகள் உத்தரகாண்டத்தின் கிழக்கிலிருந்து வங்காளதேசம் மற்றும் தாய்லாந்து, மியான்மர், கிரா பூசந்தி மற்றும் ஆங்காங் வரை பரவியுள்ளது. இது அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட இனமாக இருக்கலாம். சீனாவின் ஐனான் பறவைகளுக்கு 1964 ஆம் ஆண்டு சோ-ஹ்சின் செங் என்பவரால் சியென்ஃபெங்கென்சிஸ் என்ற பெயர் முன்மொழியப்பட்டது.
  • S. f. saturatior E. J. O. Hartert, 1902 - இது பினாங்கு, சிங்கப்பூர், தி, லிங்க தீவுக்கூட்டம் மற்றும் சுமத்ராவை உள்ளடக்கிய கிரா பூசந்தியின் தெற்கே மலாய் தீபகற்பத்தில் பரவியுள்ளது.
  • S. f. corallipes (Sharpe, 1888) - போர்னியோவில் மரத்துவா தீவு வரை விரிந்து காணப்படுகிறது.
  • S. f. palawana E. J. O. Hartert, 1905 - மேற்கு பிலிப்பைன்சில் பலவான் மற்றும் பலாபாக்.
  • S. f. velata Temminck, 1821 – ஜாவா. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Sitta frontalis". IUCN Red List of Threatened Species 2016: e.T22711216A94283983. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22711216A94283983.en. https://www.iucnredlist.org/species/22711216/94283983. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Ali, Salim; Ripley, S. Dillon (1998). Handbook of the Birds of India and Pakistan. Volume 9. Robins to Wagtails (2 ed.). Delhi: Oxford University Press. pp. 229–230.Ali, Salim; Ripley, S. Dillon (1998).
  3. Dickinson, E.C. (2006). "Systematic notes on Asian birds. 62. A preliminary review of the Sittidae.". Zool. Med. Leiden 80 (14): 225–240. http://www.zoologischemededelingen.nl/cgi/t/text/get-pdf?c=zoomed;idno=8005a16. 
  4. Quaisser, C.; R.W.R.J. Dekker (2006). "Systematic notes on Asian birds. 67. Taxonomic identity and lectotype designation of Sitta velata Temminck, 1821.". Zool. Med. Leiden 80 (19): 311–314. http://www.repository.naturalis.nl/record/210088. 

வெளி இணைப்புகள்[தொகு]