உள்ளடக்கத்துக்குச் செல்

வெலிகோ டார்னோவோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெலிகோ டார்னோவோ
Велико Търново
வெலிகோ டார்னோவோ-இன் கொடி
கொடி
வெலிகோ டார்னோவோ-இன் சின்னம்
சின்னம்
பரப்பளவு
 • மொத்தம்30 km2 (10 sq mi)
ஏற்றம்
225 m (738 ft)
மக்கள்தொகை
 (பெப்ரவரி 1, 2011)
 • மொத்தம்73,685
 • அடர்த்தி300/km2 (800/sq mi)
நேர வலயம்ஒசநே+02:00 (கி.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+03:00 (கி.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு
5000
இடக் குறியீடு(+359) 062
இணையதளம்www.veliko-tarnovo.bg

வெலிகோ டார்னோவோ (Veliko Tarnovo) வடக்கு மத்திய பல்கேரியாவிலுள்ள ஒரு நகரமாகும்.[1][2]

கிழக்கு ஐரோப்பிய ஆட்சியாளர்களைக் குறிக்கின்ற வகையில் பெரும்பாலும் திசார்களின் நகரம் என்று அழைக்கப்படும் வெலிகோ டார்னோவோ யாந்திரா நதியில் அமைந்துள்ளது. இரண்டாம் பல்கேரிய இராச்சியத்தின் வரலாற்று தலைநகரம் என்றும் பிரபலமாக அறியப்படுகிறது, பல சுற்றுலாப் பயணிகளை அதன் தனித்துவமான கட்டிடக்கலை மூலம் ஈர்க்கிறது. யாந்திரா நதியின் நெளியும் சுற்று வழிகளுக்கு இடையே உயர்ந்துள்ள திசாரெவெட்சு, திராபெசிட்சா மற்றும் சுவெட்டா கோரா என்ற மூன்று மலைகளுக்கிடையில் இந்நகரத்தின் பழைய பகுதி அமைந்துள்ளது.

திசாரெவெட்சில் பல்கேரிய பேரரசர்களின் அரண்மனைகள் மற்றும் பாரம்பரியத் தலைவர், மற்றும் அவர் கட்டுபாட்டிலுள்ள தேவாலயம் மற்றும் தடிமனான சுவர்களால் சூழப்பட்ட பல நிர்வாக மற்றும் குடியிருப்பு மாளிகைகள் உள்ளன. திராபெசிட்சா பல தேவாலயங்களுக்காகவும், பிரபுக்களின் முன்னாள் முக்கிய இல்லமாகவும் அறியப்படுகிறது. இடைக்காலத்தில், இந்த நகரம் ஐரோப்பிய கலாச்சாரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்தது. டார்னோவோ கலைப் பள்ளியின் கட்டிடக்கலை, டார்னோவோ கலைப் பள்ளியின் ஓவியம் மற்றும் இலக்கியத்திற்கு இந்நகரம் புகழ் பெற்றிருந்தது. வெலிகோ டார்னோவோ நகரம் வடக்கு பல்கேரியாவின் முக்கியமான நிர்வாக, பொருளாதார, கல்வி மற்றும் கலாச்சார மையமாகவும் திகழ்கிறது.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. История на Велико Търново. Том 1: Праистория, античност и средновековие с.24,Отечествен фронт 1986
  2. [[தொடர்பிழந்த இணைப்பு] на Велико Търново]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெலிகோ_டார்னோவோ&oldid=3229248" இலிருந்து மீள்விக்கப்பட்டது