வெர்னோனியா சேவாராயன்சிஸ்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மலைச்சுத்தி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
வெர்னோனியா சேவாராயன்சிஸ் (Vernonia Shevaroyensis) என்பது ஒரு மரமாகும்.[1] இத்தாவரம் தமிழகத்தின், ஏற்காடு மலைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை. இதனால் இப்பெயர் இதற்கு வந்தது. இத்தாவரம் சூரியகாந்தி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சூரியகாந்தி குடும்பத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன என்றாலும், அவற்றில் வெறும் மூன்று வகைகள் மட்டுமே மரமாக வளரக் கூடியவை. அவற்றில் ஒன்றுதான் வெர்னோனியா சேவாராயன்சிஸ் மரம். ஒரு காலத்தில் ஏற்காடு மலைப் பகுதிகளில் இயல்பு தாவரமாக இருந்த இந்த மரங்கள் அழிந்துவிட்டன. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு காட்டுப் பகுதியில் எஞ்சி இருந்த 2 தாய் மரங்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இந்நிலையில் ஒரேயொரு தாய் மரம் மட்டும் ஏற்காடு தாவரவியல் பூங்காவில் வளர்க்கப்பட்டுவருகிறது. இந்த மர வகையில் உலகில் எஞ்சியுள்ள ஒரே மரம் இதுதான் என்கின்றனர் தாவரவியல் ஆய்வாளர்கள்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Plant List". theplantlist.org. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "ஏற்காட்டின் பசுமை அற்புதங்கள்". தி இந்து (தமிழ்). 5 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)