வெர்ஜினா

ஆள்கூறுகள்: 40°29′N 22°19′E / 40.483°N 22.317°E / 40.483; 22.317
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெர்ஜினா
Βεργίνα
மக்கெடோனின் இரண்டாம் பிலிப்பின் கல்லறையாக கருதப்படுவது
மக்கெடோனின் இரண்டாம் பிலிப்பின் கல்லறையாக கருதப்படுவது
அமைவிடம்
வெர்ஜினா is located in கிரேக்கம்
வெர்ஜினா
வெர்ஜினா
ஆள்கூறுகள் 40°29′N 22°19′E / 40.483°N 22.317°E / 40.483; 22.317
வலயத்தில் அமைவிடம்
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: மத்திய மக்கெடோனியா மாநிலம்
மண்டல அலகு: இமாத்தியா
நகராட்சி: வெரோய்யா
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2001)[1]
நிர்வாக அலகு
 - மக்கள்தொகை: 2,478
சமூகம்
 - மக்கள்தொகை: 1,246
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
வாகன உரிமப் பட்டை: ΗΜ
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஐகையின் தொல்லியல் அமைவிடம் (தற்போதைய பெயர் வெர்ஜினா)
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுi, iii
உசாத்துணை780
UNESCO regionஐரோப்பாவும் வட அமெரிக்காவும்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1996 (20th தொடர்)

வெர்ஜினா (Vergina, கிரேக்க மொழி: Βεργίνα) வடக்கு கிரேக்க நாட்டில் மத்திய மக்கெடோனியா மாநிலத்தில் இமாத்தியா வலயப்பகுதியில் அமைந்துள்ள சிறு நகரமாகும். 2011ஆம் ஆண்டு உள்ளாட்சி சீரமைப்பின்படி இது வெரோய்யா நகராட்சியின் அங்கமாக உள்ளது.[2] கிரேக்கத் தொல்லியலாளர் மனோலிசு அந்த்ரோனிகோசு மக்கெடோனின் பண்டைய அரசர்களின் கல்லறைகளைக் கண்டுபிடித்த பின்னர் இந்த நகரம் உலகளவில் அறியப்பட்டது. அவர் இங்கு பேரரசன் அலெக்சாந்தரின் தந்தை இரண்டாம் பிலிப்பின் கல்லறையை அடையாளப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்புகள் மூலம் இதுவே பண்டைய ஐகை (கிரேக்க மொழி: Αἰγαί) என நிறுவினார்.

தற்போதுள்ள வெர்ஜினா நகரம் வெரோய்யா நகர மையத்திலிருந்து தென்கிழக்கே ஏறத்தாழ 13 கிமீ (8 மைல்) தொலைவிலும் கிரேக்க மக்கெடோனியாவின் தலைநகரமான தெசாலோனிக்கிலிருந்து ஏறத்தாழ 80 கிமீ (50 மைல்) தென்மேற்கிலும் அமைந்துள்ளது. பெரியா மலையின் அடிவாரத்தில் கடல்மட்டத்திலிருந்து 120 மீ (394 அடி)உயரத்தில் அமைந்துள்ள இதன் மக்கள்தொகை இரண்டாயிரமாக உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்ஜினா&oldid=3344630" இலிருந்து மீள்விக்கப்பட்டது