உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்நுணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண் நுணா
இலையும் பழங்களும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. citrifolia
இருசொற் பெயரீடு
Morinda citrifolia
L.

வெண் நுணா அல்லது நோனி அல்லது இந்திய மல்பெரி என்று அழைக்கப்படும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தென்கிழக்கு நாடுகளான ஹவாய், ஜாவா, பிலிப்பீன்சு மற்றும் ஆஸ்திரலேசியா போன்ற நாடுகளில் அதிகம் விளைந்து ஏற்றுமதியாகிறது[1]. அடர் பச்சை இலைகளுடன் 30 அடி உயரம் வளரும் இது பூக்கும் தாவரமாகும். இதன் பூக்களை மார்ச்-மே மாதங்களில் தோன்றுபவை, மேலும் இப்பூக்களில் தேன் நிறைந்து காணப்படுகிறது.[2] ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் கடலோரங்கள், எரிமலைத் திட்டுகள், சுண்ணாம்பு பாறைகள் போன்ற கடல்சார்ந்த இடங்களில் நன்கு வளர்கிறது. பசிபிக் தீவு நாடுகளில் மக்கள் இதனை உணவாகவும் உண்கிறார்கள். புற்று நோய்க்கு பெருமருந்தாகவும் பயன்படுகிறது[3]. இந்த மரம் தமிழ் நாட்டின் பூர்வீக மரமான மஞ்சனத்தி மரத்தின் வகையைச்சேர்ந்தது ஆகும்.[4]

வெண் நுணாவை தென்கிழக்காசிய மொழிகள் சிலவற்றில், குறிப்பாக ஓசியானிய மொழிகள் சிலவற்றில் நோனி என அழைக்கின்றனர். வெண் நுணாப் பழத்தின் சாறெடுத்து அதற்கு வேறு சுவையூட்டி, சில நோய்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அது இந்தோனேசியாவில் சில வணிகப் பெயர்களில் காணப்படுகிறது. ஆயினும் அவர்கள் கூறும் மருத்துவ குணங்கள் வெண் நுணாவுக்கு மட்டும் சிறப்பானவையென நிறுவப்படவில்லை.

மருத்துவப் பயன்கள்

[தொகு]
  • எந்த நோயாக இருந்தாலும், அந்த நோய்க்குரிய சிகிச்சையுடன் சேர்த்து நோனி பழச்சாற்றை எடுத்துக்கொள்ளவே அறிவுறுத்தப்படுகிறது. நோனிப் பழச்சாற்றைக் குடிக்கும்போது, அப்படியே விழுங்கிவிடாமல் சிறிதுநேரம் வாயில் அடக்கி வைத்திருந்து, பிறகு விழுங்குவதால் சிறப்பான பலன் கிடைக்கும். ஏனெனில், நோனிப்பழச் சாற்றுடன் உமிழ்நீர் சேரும்போது உடலில் உள்ள சத்துக் குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன. 
  • நோயற்ற நிலையில் காலை, மாலை 1 தேக்கரண்டி (5 மில்லி) தனிப் பழச்சாற்றுடன் தண்ணீர் அல்லது வெந்நீர் சேர்த்துக் குடிக்கலாம். மன அழுத்தம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஒவ்வாமை, ஜீரணக் கோளாறு, நரம்பு மற்றும் வாத வலிகள், தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள் முதலான அனைத்து நாட்பட்ட நோய்களுக்கும் மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி நோனிப்பழச்சாறு எடுத்துக்கொண்டால் சிறப்பான பலன் கிடைக்கும். 
  • சிறுநீர்ப்பைத் தொற்று, எலும்பு முறிவு, மூக்கடைப்பு, தீவிரக் காய்ச்சல், பல்வலி, இருமல், புற்றுநோய், ஆழமான காயங்கள் உள்ளிட்ட திடீர் மற்றும் தீவிர நோய் நிலைகளில் உள்ளவர்கள், தினமும் 6 முதல் 8 தேக்கரண்டி பழச்சாற்றினை இரண்டு, மூன்று வேளைகளாகப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • உயிருக்கு ஆபத்து நேரிடும் நோயுற்ற நிலை மற்றும் விபத்தினால் உண்டாகும் அதி தீவிர நிலைகளில், தகுந்த மருத்துவச் சிகிச்சைகளோடு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 15 மில்லி நோனிப்பழச்சாறு உட்கொண்டு வந்தால் மன அமைதி உண்டாகி வலிகள் குறையும். அழிவு நிலையில் உள்ள செல்கள் விரைவில் புத்துயிர் பெறும். நோனிப் பழச்சாறு உடனடியாகப் புத்துணர்வு கொடுக்கும். 
  • பாலூட்டும் தாய்மார்கள், இதை அருந்தினால் குழந்தைக்கு வரும் நோய்கள் குணமாகும். உடல் பலவீனமானவர்கள், நோனிப் பழச்சாற்றை நீரில் கலந்துதான் பயன்படுத்த வேண்டும். நோனிப் பழச்சாற்றைப் பூண்டுடன் எடுத்துக்கொண்டால், கொழுப்புச்சத்து குறையும். நோனிப் பழச்சாற்றுடன் வைட்டமின் டி சேர்ந்த கலவை நீரிழிவு, எலும்பு தேய்மானம், நரம்பு வலிகள் ஆகியவற்றைக் குணமாக்கும். 

எச்சரிக்கை

[தொகு]
  • 8 வயதுக்கு மேலானவர்களுக்குத்தான், நோனிப் பழச்சாறு கொடுக்க வேண்டும். ஆனால், சில நோய் நிலைகளில் ஒன்று முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கால் தேக்கரண்டி; மூன்று வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி அளவில் கொடுக்கலாம். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு நோனிப் பழச்சாறு வழங்கும்போது, மலம் மிகவும் இளகியே வெளியேறும். சாதாரண நிலையில் பெரியவர்கள் நோனிச்சாறு குடிக்கும்போது மலம் இளகி வெளியேறுவது குடல் தூய்மையாவதன் அறிகுறியாகும். தொடர்ந்து மலம் இளகி வெளியேறினால், உட்கொள்ளும் அளவைக் குறைக்க வேண்டும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nelson, SC (2006-04-01). "Species Profiles for Pacific Island Agroforestry: Morinda citrifolia (noni)". {{cite web}}: Unknown parameter |source= ignored (help)
  2. கிழக்கில் விரியும் கிளைகள் 45: நிஜ நுணா மருந்தாகுமா? தி இந்து தமிழ் 3 செப்டம்பர் 2016
  3. மரவளம் வலைப்பூ
  4. [1]

5.பசுமை விகடன் 2017-02-10

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்நுணா&oldid=3854584" இலிருந்து மீள்விக்கப்பட்டது