வெங்கடராம ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜா பகதூர் வெங்கடராம ரெட்டி (Venkatarama Reddy) (ஆகஸ்ட் 1869 - 1953) என்பவர் ஐதராபாத் இராச்சியத்தின் முதல் இந்து கொத்தவால் ஆவார். 19 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், நிசாம்களின் ஆட்சியின் போது, ஐதராபாத்தின் கொத்தவால் (காவல் ஆணையர்) சக்திவாய்ந்த நிலைப்பாடு வழக்கமாக முஸ்லிம்களால் இந்தப்பணி நடத்தப்பட்டு வந்தது. இவரது பதவிக்காலம் 14 ஆண்டுகள் நீடித்தது. இவரது சிறந்த காவல் நிர்வாகத்திற்காக பொதுமக்கள் மத்தியில் இவருக்கு பெரும் மரியாதை இருந்தது. [1]

இராஜா பகதூர் வெங்கடராம ரெட்டியின் சிலை

7 வது நிசாம் இராஜா வெங்கட்ரம ரெட்டியை மிகவும் விரும்பினார் என்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் பல ஆதாரங்களில் கூறப்பட்டுள்ளது. [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வெங்கடராம ரெட்டி ஆகஸ்ட் 1869 இல் ஐதராபாத் இராச்சியத்தில் (இப்போது மகபூப்நகர் மாவட்டம் ) வனபர்த்தி சமஸ்தானத்தின் இராயனிபேட்டை கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சுமார் எட்டு கிராமங்களைச் சேர்ந்த படேல் ஆவார். இவர் அப்போதைய வனபர்த்தியின் இராஜாவின் பெரிய மருமகன் ஆவார். இவர் பிறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு இவரது தாயார் இறந்து போனார். இவருக்கு 5 வயதாக இருந்தபோது [2] வனபர்த்தி சமஸ்தானத்தின் பராமரிப்பாளர் வில்லியம் வகாப் இவரை கவனித்துக்கொண்டார். (அவரை கிறிஸ்தவர் என்று குறிப்பிடலாம், ஆனால் அது அப்படி இல்லை. ) வனபர்த்தியின் இராஜா தனது சிறுவர்களில் சிலருக்கு கல்வி கற்பிக்க ஒரு கத்தோலிக்க ஆசிரியரை நியமித்திருந்தார். இவர் தனது கிராமத்திலும் பின்னர் வனபர்த்தியிலும் கல்வி கற்றார். அங்கு இவர் இரண்டாம் இராஜா இராமேசுவர் இராவின் வகுப்புத் தோழரானார்.

வாழ்க்கை[தொகு]

ஐதராபாத் நகர காவல் ஆணையர் 'கொத்தவால்' என்று அழைக்கப்பட்டார். இது மிகப் பழமையான நியமனங்களில் ஒன்றாகும். மேலும் இது நிசாம் அரசாங்கத்தின் மிக சக்திவாய்ந்த பணியாக பயன்படுத்தப்பட்டது.

நகர காவல் ஆணையராக, இவர் முன்னாள் அதிகாரப்பூர்வ பணியாளர்களில் பல்தியாவிற்கும் தலைமை தாங்கினார். நகரத்தில் அமைதி மற்றும் சுத்தமாக இருப்பதற்கு இவர் பொறுப்பாவார். இவர் தெரு விளக்குகளை ஒரு பாதுகாப்பு நடவடிக்கைக்காக அறிமுகப்படுத்தியுள்ளார் (அந்த நாட்களில் அது காண்டில் என்று அழைக்கப்பட்டது). இதற்காக அர்ப்பணிப்பு நிறைந்த ஊழியர்களை நியமித்தார். இவர் அனைத்து தெருக்களிலும் வாராந்திர சிறப்பு துப்புரவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையிலும் சுத்தமான நகரத்தைக் காணமுடிந்தது.

இந்த அலுவலகத்தின் கடைசி கொத்தவாலான இவர் ஒரு இந்துவாக இருந்தார். இவர் 14 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வேலையில் பணியாற்றினார். மேலும் இவரது வாழ்நாளில் மிகவும் பிரபலமானவரானார்.

வெங்கடராம ரெட்டி இராய்சூரில் பணியாற்றும்போது, அதன் பராமரிப்பாளரான வகாப் திடீரென இறந்தார். வெங்கடராம ரெட்டி இராய்சூரில் தங்கியிருந்து வகாபின் வாரிசான நாசர் முகம்மது கான் என்பவரால் அப்பணியில் அமர்த்தப்பட்டார். அப்போது இளைஞான இவர் சில அடிப்படைக் கல்வியை மட்டுமே பெற்றிருந்தார். கான் இவரை காவல்துறையில் நான்காம்தர காவலராக நியமித்தார்.

இவர் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் இவரது விடாமுயற்சியால் இவரது பதவி படிப்படியாக உயர்ந்தது. நிசாமாபாத்தில் பணிபுரிந்தபோது, பிரித்தன் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவரைக் கண்டுபிடிக்க இவர் உதவினார். இதற்காக இவருக்கு பதினொரு ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மாநில காவல்துறைத் தலைவரான ஹெம்கின் இவரை மாநிலத்தின் சிறந்த அதிகாரியாக அறிவித்தார். 1901ஆம் ஆண்டில் மாவட்ட காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், நகரத்தைச் சுற்றியுள்ள அத்ராப்-இ-பால்தா பகுதி உட்பட பல மாவட்டங்களில் பணியாற்றினார். அப்போது வனபர்த்தியின் இராஜாவாக இருந்த இவரது பழைய வகுப்புத் தோழரின் செயலாளராக பணிபுரிந்தார். [ மேற்கோள் தேவை ] நவாப் இமாதத் ஜங் ஐதராபாத்தின் கொத்தவால் ஆனபோது, வெங்கடராமை தனது முதல் உதவியாளராக நியமிக்கும்படி கேட்டுக்கொண்டார். இவர் ஆறு ஆண்டுகள் அந்தப் பணியில் பணியாற்றினார். அப்போது நகர காவல்துறையில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார்.

கொத்தவாலாக[தொகு]

வெங்கடராம ரெட்டி தனது நுட்பமான வேலையை மிகச்சிறப்பாக கையாண்டார். நிசாம் மட்டுமல்ல, இரு முன்னணி சமூகங்களின் உறுப்பினர்களும் அவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். சுதந்திரப் போராட்டம் பலம் பெற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஐதராபாத் கலிபாத் இயக்கத்தால் மூழ்கடிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அகமதாபாத்தில் இருந்து ஒரு குழு கிளர்ச்சியாளர்கள் வந்து உள்ளூர் தலைவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. நீதிமன்றத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வெங்கடராம ரெட்டியே அந்த இடத்திற்குச் சென்று தலைவர்களை அமைதியான வழிகளைப் பின்பற்றும்படி வற்புறுத்தினார். விநாயகர் ஊர்வலத்தில் நான்கு காவலர்களை சிலையை ஏந்திசெல்பவராக ஆக்கியதின் மூலம் இவர் அமைதியை நிலை நாட்டினார். [3]

இராஜா பகதூர்[தொகு]

நிசாம் இவருக்கு பிறந்த நாளில் இராஜா ராவ் பகதூர் என்ற பட்டத்தை வழங்கினார். ஒரு வருடம் கழித்து பிரித்தானிய அரசு இவருக்கு பிரித்தானிய பேரரசின் ஆணை வழங்கியது.

பல இடங்களில் பணிபுரிந்த பின்னர், இவர் இறுதியாக 1934 இல் ஓய்வு பெற்றார். இவருக்கு மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, இவர் நிசாமின் தனித் தோட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சாகிப்சாதாக்களின் கடனளிப்பு தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அறப்பணி[தொகு]

சமூகப் பணிகளில் ஈடுபடும் அரிய அதிகாரிகளில் வெங்கடராமும் ஒருவர். இவர் ரெட்டி சமூகத்தை கல்வி கற்கவும், அரசு வேலைகளை பெறவும் வற்புறுத்தினார். ஐதராபாத்தில் தங்குவதற்கு வசதியாக, இவர் இராஜாக்கள் மற்றும் முன்னணி நில உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகள் மூலம் ரெட்டி விடுதி ஒன்றை நிறுவினார். மேலும், இவர் ரெட்டி மகளிர் பள்ளியையும் நிறுவினார். உஸ்மானியா பல்கலைக்கழகம் ஒரு தெலுங்கு நடுத்தர பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவில்லை என்பதால்; இவர் அதை புனேவில் உள்ள கார்வே நிறுவனத்துடன் இணைத்தார். இப்போது பள்ளி ஒரு கல்லூரியாக மாறிவிட்டது. இவர் பல கல்வி மற்றும் அறப்பணி நிறுவனங்களையும் நிறுவினார். மாநில சட்டமன்ற உறுப்பினராக, குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான விதிகளையும், விதவை மறுமணம் செய்வதற்கான மசோதாக்களையும் ஆதரித்தார்.

இறப்பு[தொகு]

ராஜா பகதூர் வெங்கடராம ரெட்டி 1953 இல் காலமானபோது, இவர் வசம் முப்பது ரூபாய் ரொக்கம் மட்டுமே இருந்தது. இவரது முதல் மனைவி ரங்கா ரெட்டி இவரது மகன் பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு இறந்தார். இவரது இரண்டாவது மனைவிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தன. மகள், நர்சம்மா, பதர்கட்டியைக் சேர்ந்த ஒரு ஒப்பந்தக்காரரை மணந்தார். மகன், லட்சும ரெட்டி வழக்கறிஞானார். மேலும், இரண்டு ஆங்கிலப் பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக திருமணம் செய்து உயர் நீதிமன்றத்தின் நீதிபதியானார். இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.

அரசாங்கத்தின் மரியாதை[தொகு]

ஐதராபாத்தில் உள்ள ஆந்திரப் காவல் கழகத்திற்கு "ராஜா பகதூர் வெங்கடராம ராமி ரெட்டி தெலுங்கானா மாநில காவல் கழகம் ,ஐதராபாத்" என பெயர் மாற்றம் செய்ய தெலங்காணா மாநில அரசு அரசாணை வழங்கியுள்ளது. [4]

மேலும் காண்க[தொகு]

மேலும் படிக்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Raja Bahadur Venkatarama Reddy | Hyderabad Police online portalபரணிடப்பட்டது 2015-02-06 at the வந்தவழி இயந்திரம்
  2. 2.0 2.1 "Raja Bahadur Venkata Rama Reddy key player in Hyderabad education". https://www.deccanchronicle.com/nation/current-affairs/240817/raja-bahadur-venkata-rama-reddy-key-player-in-hyderabad-educ.html. 
  3. "RAJA BAHAUR VENKATARAMA REDDY". 2018-01-11.
  4. "RBVR Telangana State Police Academy". Archived from the original on 2020-01-31. பார்க்கப்பட்ட நாள் 2020-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடராம_ரெட்டி&oldid=3572213" இலிருந்து மீள்விக்கப்பட்டது