கொத்தவால்
கொத்தவால் (Kotwal) மத்தியகால இந்திய வரலாற்றில் மன்னரின் அரண்மனைகள் மற்றும் மக்கள் வாழும் நகரத்தைச் சுற்றியுள்ள கோட்டைகளை நாட்டின் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பணி மேற்கொள்பவர் ஆவார். [1]
மொகலாயப் பேரரசின் காலத்தில், கொத்தவால் எனும் பதவி, பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள கோட்டைகளையும், சாவடிகளையும் நிர்வகிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கும் உள்ள அதிகாரிக்கு கொத்தவால் என்பவர். கொத்தவால் எனும் தலைமைப் படைத்தலைவரின் கீிழ் உள்ள படைவீரர்கள் கோட்டை மதில்சுவர்கள் மீதுள்ள காவல் கோபுரங்கள் மீது ஏறி தொலைவில் வருபவர்களை கண்காணிப்பதற்கும், கோட்டை வாயிற்கதவுகள் வழியாக நகரத்தில் மற்றும் அரண்மனைக்கு வருபவர்களை சோதித்து, அதில் வேற்று நாட்டு ஒற்றர்கள் உள்ளனரான என்பதை கண்காணிப்பர்.
கொத்தவால் என்பதை ஆங்கிலத்தில் தலைமைக் காவல் அதிகாரி என்பர்.[2]
கொத்தவால் சமூகங்கள்
[தொகு]மத்தியப் பிரதேசத்தில் வீடு அல்லது தோட்டக் காவல் பணி செய்யும் கொத்தவால் சமூகத்தினர் தாழ்த்தப்பட்டோராக உள்ளனர். மேலும் குஜராத் மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களில் கொத்தவால் சமூகத்தினர் தாழ்த்த்தப்பட்ட பிரிவினராக உள்ளனர். [3]
- ஜவஹர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேருவின் தந்தை கங்காதர் நேரு, முகலாயப் பேரரசின் இறுதி மன்னரான இரண்டாம் பகதூர் ஷா ஜாபர் காலத்தில் செங்கோட்டையின் இறுதி கொத்தவாலாக, சிப்பாய்க் கிளர்ச்சியின் போது பணியில் இருந்தார். [4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Massy, Charles Francis (1890). Chiefs and families of note in the Delhi, Jalandhar, Peshawar and Derajat divisions of the Panjab. Printed at the Pioneer Press. p. 407. பார்க்கப்பட்ட நாள் 29 May 2010.
- ↑ Saudā, Mirzā Muḥammad Rafiʻ; (Major), Henry Court (1872). Selections from the Kulliyat, or, Complete works of Mirza Rafi-oos-Sauda: being the parts appointed for the high proficiency examination in Oordoo. Printed by J. Elston, "Station Press,". pp. 20–. பார்க்கப்பட்ட நாள் 29 May 2010.
- ↑ Kotwal in India
- ↑ Sahgal, Manmohini Zutshi (1994). An Indian Freedom Fighter Recalls Her Life. M.E. Sharpe. pp. 3–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781563243394.
வெளியிணைப்புகள்
[தொகு]- மதுரையில் பழமையான இடங்களுக்கு பாரம்பரிய நடைபயணம், பார்த்த நாள்: தினமலர்-செப்டம்பர் 17, 2012.]