வீர் பால ரசுதோகி
வீர் பாலா ரசுதோகி (Veer Bala Rastogi) என்பவர் இந்தியாவில் உயிரியல் பாடப்புத்தகங்களை எழுதிய உயிரியலாளர் ஆவர். இவர் விலங்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, தகுதி வரிசையில் 1வது இடத்தைப் பிடித்தார், மேலும் தங்கப் பதக்கமும் பெற்றார். இவர் முனைவர் பட்டத்தினை பிரபல விலங்கியல் நிபுணர் மறைந்த முனைவர் எம். எல். பாத்தியாவின் வழிகாட்டுதலின் மீரட் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
ரசுதோகி "விலங்கியல் அகாதமியில் உறுப்பினராக இருந்தார். இவர் புது தில்லி தேசிய கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி குழுவின் "பாடநூல் பரிணாமக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர் 1961 முதல் 1967 வரை மீரட் (உத்திரப்பிரதேசம்) மீரட் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக பணியாற்றினார். இவர் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகப் புத்தகங்களை எழுதி வருகிறார். இவர் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் உள்ளிட்ட பல மாநில வாரியங்களுக்கு உயிரியல் புத்தகங்களை எழுதியுள்ளார். உயிரணு உயிரியல், மரபியல், சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல் பற்றிய இவரது புத்தகங்கள் இந்தியா முழுவதும் பல்கலைக்கழக அளவில் மிகவும் பிரபலமானவை.[1][2] 2012ஆம் ஆண்டில் இந்தியாவின் தில்லியில் உள்ள கல்வி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பால் வழங்கப்பட்ட தலை சிறந்த எழுத்தாளருக்கான ஆண்டு விருது இவருக்கு வழங்கப்பட்டது. மூலக்கூறு உயிரியலின் அடிப்படைகள் ரசுதோகியின் முக்கியமான படைப்பு ஆகும்.[3] சமீபத்தில், 11ஆம் வகுப்புக்கான இவரது பாடப்புத்தகம் பூட்டானின் தேசிய பாடப்புத்தகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IAS Zoology Books,Civil Service Exam Book for Zoology,Zoology Books for IAS Exam". Civilserviceindia.com. 2000-08-09. Retrieved 2014-04-19.
- ↑ "KNRN Publishers : Biology- Genetics By : Dr. Veer Bala Rastogi". Knrnpublications.com. Archived from the original on 2017-03-17. Retrieved 2014-04-19.
- ↑ "Google Books". Retrieved 2014-04-19.