வீரம் விளைந்தது (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரம் விளைந்தது
நூலாசிரியர்நிக்கலாய் அஸ்திரோவ்ஸ்க்கிய் (மூல நூலாசிரியர்)
எஸ். ராமகிருஷ்ணன் (தமிழாக்கம்)
உண்மையான தலைப்புКак закалялась сталь
மொழிபெயர்ப்பாளர்எஸ். இராமகிருஷ்ணன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியிடப்பட்ட நாள்
2009
பக்கங்கள்582
ISBN9788123414560

வீரம் விளைந்தது (உருசியம்: Как закалялась сталь, கக் ஸகல்யாலஸ் ஸ்தால், ஆங்கில மொழி: "How the steel was Tempered") என்பது ருஷ்ய மொழியில் நிக்கலாய் அஸ்திரோவ்ஸ்க்கிய் எழுதிய ஒரு சமூகவுடைமை நடைமுறை மெய்ம்மைப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல். மூலநூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்க்க, வீரம் விளைந்தது என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டது.

மூல நூலாசியரின் தலைமுறையைச் சார்ந்த (1915 ஆம் ஆண்டு தொட்டு 1931 ஆம் ஆண்டு வரையான) சோவியத் இளைஞ‍ர்களின் வாழ்வை இப்புதினம் விவரிக்கின்றது. இப்புதினத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் சோவியத் ஒன்றியத்தில் வாழ்ந்த சிலரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை. பன்னாட்டு வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த இந்தக்கதையின் நாயகன் பாவெல் கர்ச்சாகினின் பாத்திரம் இந்நூலாசிரியர் நிக்கலாய் அஸ்திரோவ்ஸ்க்கியின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

நிக்கலாய் அஸ்திரோவ்ஸ்க்கிய் (1904-1936) போர்முனையில் பட்ட காயத்திற்குப் பின் பார்வையிழந்து படுக்கைவாய்ப்பட்டார். வெகுவாக நோயுற்றிருந்த தன் இறுதிப் பன்னிரண்டு ஆண்டுகளில்தான் இளம் கம்யூனிஸ்ட் சங்க உறுப்பினர்களான தம்மையும் தம் நண்பர்களையும் பற்றிய இக்கதையை எழுதினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]