உள்ளடக்கத்துக்குச் செல்

வீரத்தமிழர் முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வீரத்தமிழர் முன்னணி
தலைவர்சீமான்
தொடக்கம்2015 பிப் 7[1]
தலைமையகம்கதவு எண் 8, மருத்துவமனை சாலை, செந்தில்நகர், போரூர், சென்னை – 600 116.
கொள்கைதமிழர் மெய்யியல்
இணையதளம்
naamtamilar.org
இந்தியா அரசியல்

வீரத்தமிழர் முன்னணி என்பது நாம் தமிழர் கட்சியின் ஒரு துணை அமைப்பாகும். இது தமிழர் மெய்யியல் மீட்பை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.[சான்று தேவை]

துவக்கமும் நிகழ்ச்சிகளும்

[தொகு]

வீரத்தமிழர் முன்னணி 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் நகரில் உள்ள பழனி ஆண்டவர் கல்லூரியில் துவக்கப்பட்டது.[2] இதனைத் துவக்கிய சீமான் இறைநம்பிக்கை கொண்டவர்கள், திருவள்ளுவர் நெறிகளைப் பின்பற்றுவோர்களுக்காக இந்த இயக்கம் துவக்கப்பட்டதாகவும் இது திராவிட இயக்கத்திற்கு மாற்றாகச் செயற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.[2]

திருசெந்தூர் முருகன் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த கோரி பேரணி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தொடங்கி திருச்செந்தூர் கோவில் வரை நடைபெற்றது.[3] "வேல் வழிபாடு" 2016 ஆம் ஆண்டு முதல் முருகனுக்கு உகந்த நாளான தைப்பூச நாளில் கொண்டாடி வருகிறது.[4] ஒவ்வொரு தைப்பூச நாளன்றும் தமிழக அரசு அரசுப்பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.[5]

மேலும் பார்க்க

[தொகு]

நாம் தமிழர் கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://tamil.webdunia.com/regional-tamil-news/ntk-culture-virattamilar-munnani-seeman-115020600024_1.html
  2. 2.0 2.1 "இயக்குநர் சீமான் புதிய இயக்கம் தொடக்கம்". {{cite web}}: Text "Date:பிப்ரவரி 08, 2015" ignored (help)
  3. "திருச்செந்தூர் கோவிலுக்கு வீரத்தமிழர் முன்னணி பேரணி". {{cite web}}: Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  4. http://www.tamizhvalai.com/archives/3387
  5. "அரசு பொது விடுமுறை - சீமான் கோரிக்கை". {{cite web}}: Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரத்தமிழர்_முன்னணி&oldid=3138990" இலிருந்து மீள்விக்கப்பட்டது