வீட்டுக் காவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீட்டுக் காவல் அல்லது வீட்டுச் சிறை என்பது ஒருவரை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக அவரின் நடமாட்டத்தையும், பிறருடன் நேரடியாகவோ, மறைமுகவாகவோ மற்றும் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் வசதிகள் மூலம் வெளி உலகத்தினருடன் தொடர்பு கொள்ள இயலாத வகையில் தனிமைப்படுத்த, அவரது வீட்டிலேயே முடக்கி வைப்பதாகும்.[1]

ஒரு அரசின் கொள்கைகளை எதிர்த்து, மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தும், அரசியல்செல்வாக்கு மிக்க அரசியல் அதிருப்தியாளர்களை, நீதிமன்ற ஆணை மூலம் காவல் துறையினர், சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவர் தங்கியிருக்கும் வீட்டிலேயே வெளி உலகத் தொடர்புகள் இன்றி தனிமைப் படுத்தி வைத்துவிடுவர். வீட்டுச் சிறையில் வைக்கப்படுபவர் யாரிடனும் தொடர்பு கொள்ள முடியாதவாறு, வீட்டைச் சுற்றி காவலர்கள் நிறுத்தப்படுவர். மேலும் தொலைபேசி, அலைபேசி, இணைய வசதிகளின் இன்றி வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்படும்.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட சிலர்[தொகு]

அரசிற்கு எதிரான அதிருப்தி உணர்வுகளை தூண்டி, பொதுமக்களை அரசிற்கு எதிராக வன்முறையில் அல்லது போராட்டங்களில் இறங்காதவாறு, மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள் பல நாடுகளில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர்:

இந்தியா[தொகு]

காஷ்மீர் பிரிவினையைத் தூண்டியதற்காக இந்திய அரசால் சேக் அப்துல்லா, காஷ்மீருக்கு வெளியே, தமிழ்நாட்டின் கொடைக்கானலில் ஒரு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டார்.

மியான்மர்[தொகு]

ஆங் சான் சூச்சியை மியான்மர் நாட்டின் இராணுவ அரசு மூன்று முறை வீட்டுக் காவலில் தடுத்து வைத்தது. இவர் வீட்டுக் காவலில் 15 ஆண்டுகள் கழித்துள்ளார்.[2]

இந்தோசீனா[தொகு]

இந்தோசீனா நாட்டின் முதல் அதிபர் சுகர்ணோ, இராணுவ ஆட்சித் தலைவர் சுகர்தோவால், 1967இல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

பாகிஸ்தான்[தொகு]

பாகிஸ்தான் நாட்டில் 1977இல் இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்த இராணுவத் தலைவர் முகமது ஜியாவுக் ஹல், பிரதமர் பதவியிலிருந்த சுல்பிக்கார் அலி பூட்டோவை நீக்கி, வீட்டுக் காவலில் வைத்தனர். பின்னர் 1979இல் நீதிமன்றம் புட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது. நவாஸ் செரிப், இம்ரான் கான் போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் பெர்வேஸ் முஷாரஃப்பால், பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபை[தொகு]

கலீலியோ கலிலி, சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகிறது என்ற உண்மையை, கிறித்தவ சமய நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தை வெளிபடுத்தியமைக்காக 1642 முதல் இறக்கும் வரை கத்தோலிக்க திருச்சபையின் ஆணையின் பேரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Levinson, David. (2002). Encyclopedia of Crime and Punishment: Volumes I-IV. SAGE Publications. p. 859. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-2258-2
  2. Marshall, Andrew (2009-08-11). "Burma Court Finds Aung San Suu Kyi Guilty". TIME. Archived from the original on 2009-08-14. பார்க்கப்பட்ட நாள் 2010-11-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுக்_காவல்&oldid=3572066" இலிருந்து மீள்விக்கப்பட்டது