வீசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீசனம் (Pheasant) எனும் பறவை இந்தியாவில் இல்லையென்றாலும் ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இமயமலையிலும், திபெத்து, சீனா முதலிய நாடுகளிலும் இது மிகுதியாக உண்டு. இங்கிருந்து கிரேக்கர்களாலும், ரோமானியர்களாலும் ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிறகு அமெரிக்காவிலும் புகுத்தப்பட்டது.

சிறப்பு[தொகு]

இன்று அமெரிக்காவில் தென் டகோடா மாநிலத்தின் தேசியப் பறவையாக உள்ளது.

உணவுப்பழக்கம்[தொகு]

பழங்களும் தானியங்களும் இதற்கு உணவு.

இயல்பும் வகைகளும்[தொகு]

ஆண்பறவை அழகானது. ஆண்பறவைகள் கூடுகட்டுவதில் ஈடுபடுவதில்லை. ஒவ்வொரு ஆணும் பல பெண் பறவைகளுடன் வாழும். வீசனம் கோழிக்கும் மயிலுக்கும் நெருங்கிய உறவானது. மயிலைப் போலவே, இப்பறவையும் இரவில் ஆபத்துக்கு தப்ப மரக்கிளைகளின் உச்சியில் தூங்கும்.

பொன் வீசனக் கோழி, வெள்ளி வீசனக்கோழி என்று நிறத்திற்குத் தக்கவாறு பெயர்களையுடைய பல வீசனங்கள் உள்ளன. இதன் இறைச்சி உண்பதற்கு ஏற்றது. கொண்டை வீசனக் கோழிக்குத் தலையில் மயிலைப்போலக் கொண்டை உண்டு. இதன் நிறம் பிரகாசமான மரகதப் பச்சையும் அதனுடன் சிவப்பும் பொன்னிறமும் கலந்திருக்கும். பெண்ணுக்கு நிறம் மஞ்சளாக இருக்கம்.

நூறு கண் வீசனக்கோழி[தொகு]

நூறு கண் வீசனக்கோழி (Argus Pheasant) சுமத்திராவிலும், மலேசியாவிலும் உண்டு. இதன் வாலிலும் சிறகிலும் கண்கள் போன்ற வெண்மையும் கருமையும் கலந்த பல புள்ளிகள் இருப்பதால் இப்பெயர் வந்தது. ஆண் நடிக்கும்போது சிறகுகளை விரித்து அவைகளிலுள்ள கண்களைக் காட்டி ஆடும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

காணொலி [1] பரணிடப்பட்டது 2016-06-01 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீசனம்&oldid=3728239" இலிருந்து மீள்விக்கப்பட்டது