மயிலை
Appearance
மயிலை என்பது ஒரு நிறம். வெளிர்-கருமை நிறம் கொண்ட மாட்டை மயிலைமாடு எனக் கூறும் வழக்கம் இக்காலத்திலும் உண்டு.
சங்ககாலப் புலவர் அரிசில் கிழார் மயிலைப் பூ காட்டுக்காக்கை போல வெளிர்கருமை நிறம் கொண்டது என்றும், மகளிர் அதனைக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொண்டது பற்றியும் குறிப்பிடுகிறார்.[1]
சிலப்பதிகாரம் [2] மணிமேகலை [3] ஆகிய நூல்கள் மயிலைமலர் பற்றிக் குறிப்பிடுகின்றன.
- மயிலாப்பூர்
- சென்னையிலுள்ள மயிலாப்பூரை மயிலை என்று வழங்குகின்றனர்.