வி. கே. பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கே. பாண்டியன்
2023 இல் வி. கே. பாண்டியன்
பிறப்பு25 ஏப்ரல் 1974 (1974-04-25) (அகவை 50)
தமிழ்நாடு, இந்தியா
கல்விவேளாம்மையில் முதுகலைப் பட்டம்
பணிஓய்வுபெற்ற இ.ஆப. அலுவலர், 5T தலைவர் (வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பம், குழுப்பணி, நேரம், உரு மாற்றீடு)
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம் (2023 - தற்போது)
வாழ்க்கைத்
துணை
சுஜாதா ஆர்.கார்த்திகேயன்,

வி. கே. பாண்டியன் (பிறப்பு: வி. கார்த்திகேய பாண்டியன், 29 மே 1974) என்பவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த முன்னாள் இ.ஆ.ப அதிகாரி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினர் ஆவார். 1999 இல் குடிமைப் பணிக்கு தேர்வானவரான பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய்க்கின் தனிச் செயலாளராகவும், ஒடிசா அரசின் முதல்வரின் முயற்சிகளின் செயலாளராகவும் பணியாற்றினார். [1] [2] [3]

துவக்க வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

பாண்டியன் வேளாண்மையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

2000 ஆண்டு பயிற்சி புடித்த இ.ஆ.ப. அதிகாரியான பாண்டியன் முதலில் கலஹண்டி மாவட்டத்தில் தர்மகரின் சாராட்சியராகப் தனது பணியைத் தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு ஒடிசா முதலமைச்சரின் அலுவலகப் பணியில் இணைந்தார். பின்னர் நவீன் பட்நாயக்கின் மிகவும் நம்பகமான தளபதி ஆனார். வி. கே. பாண்டியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மேலும் பஞ்சாப் கேடரில் இ.ஆ.ப (இந்திய நிர்வாக சேவை) அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஒடியா இ.ஆ.ப அதிகாரியான சுஜாதா ரௌட்டைத் திருமணம் செய்து கொண்டதால் ஒடிசா மாநிலத்தில் பணி பெற்ற பிறகு இவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்பட்டது.

தொழில்[தொகு]

இவர் 2000 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். 2002ல் தர்மகரின் சாராட்சியராக நியமிக்கப்பட்டார். மயூர்பஞ்சு மற்றும் கஞ்சம் ஆட்சியராகக பணிபுரிந்த பிறகு, 2011இல் முதல்வர் நவீன் பட்நாய்க்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் 2023 வரை இப் பதவியில் இருந்தார். [4] [5] [6]

2023 ஆம் ஆண்டு, அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு, பாண்டியன் மீண்டும் 5T (வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பம், குழுப்பணி, நேரம், உரு மாற்றீடு) முன்முயற்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இது கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்டதாகும். [7]

பாண்டியன் 2023, நவம்பர், 27 அன்று, கட்சித் தலைவரும் ஒடிசாவின் முதலமைச்சருமான நவீன் பட்நாய்க் முன்னிலையில் முறைப்படி பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். [8]

அண்மையில், பாண்டியன், நவீன் பட்நாயக்கின் அறிவுறுத்தலின் பேரில், யாத்ரீகர்களின் வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஸ்ரீமந்திர் பரிக்ரமா திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். இவர் மாநிலம் முழுவதும் உள்ள பழமையான, புகழ்பெற்ற கோயில்களின் மறுசீரமைப்பு மற்றும் உயர்நிலை பள்ளி மேம்பாடு திட்டத்தில் முதலமைச்சருக்கு உதவியாக பணிபுரிந்தார். பாண்டியன் ஒடிசா முழுவதும் உள்ள மருத்துவமனைகளை மாற்றியமைத்த பெருமைக்குரியவர்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் சக இ.ஆ.ப அதிகாரியான சுஜாதா ஆர். கார்த்திகேயனை மணந்தார். [9]

அங்கீகாரம்[தொகு]

ஒடிசா மாநிலத்தில் ஹாக்கி விளையாட்டிற்கு பாண்டியன் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2023 சனவரி 29, எஃப்ஐஎச் தலைவர் விருதை ஹாக்கி ஆடவர் உலகக் கோப்பை போட்டியின் போது சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பானது வழங்கியது. [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "V Karthikeyan Pandian: 'Super CM' or efficient bureaucrat". The Times of India. 2018-02-11. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/v-karthikeyan-pandian-super-cm-or-efficient-bureaucrat/articleshow/62872968.cms?from=mdr. 
  2. "FIH honour for Odisha IAS officer V K Pandian". The Times of India. 2021-05-23. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/sports/hockey/top-stories/fih-honour-for-odisha-ias-officer-v-k-pandian/articleshow/82874059.cms?from=mdr. 
  3. "Odisha CM Naveen Patnaik's aide gets cabinet rank". The Economic Times. 2023-10-25. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0389. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/odisha-cm-naveen-patnaiks-aide-gets-cabinet-rank/articleshow/104680948.cms. 
  4. "Day after quitting IAS, Odisha Chief Minister's aide V.K. Pandian takes up key roles". https://www.thehindu.com/news/national/other-states/rise-of-tamil-nadu-born-ias-officer-in-odishas-public-life/article67452770.ece. 
  5. "CM Patnaik's Private Secretary VK Pandian gets additional responsibility of 5Ts". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
  6. "V.K. Pandian, Odisha's influential bureaucrat". https://www.thehindu.com/opinion/op-ed/vk-pandian-odishas-influential-bureaucrat/article67019398.ece. 
  7. Barik, Satyasundar (24 October 2023). "Day after quitting IAS, Odisha Chief Minister’s aide V.K. Pandian takes up key roles" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/rise-of-tamil-nadu-born-ias-officer-in-odishas-public-life/article67452770.ece. 
  8. "Naveen Patnaik’s ex-private secretary VK Pandian joins BJD; likely to get number-2 position in party" (in en). The Indian Express. 27 November 2023. https://indianexpress.com/article/india/vk-pandian-naveen-patnaik-joins-bjo-odisha-elections-9044003/. 
  9. Sharma, Nootan (2023-09-19). "Odisha is becoming an IAS state. Patnaik-Pandian combo is changing grammar of governance". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
  10. "FIH honour for Odisha IAS officer V K Pandian". The Times of India. 23 May 2021. https://timesofindia.indiatimes.com/sports/hockey/top-stories/fih-honour-for-odisha-ias-officer-v-k-pandian/articleshow/82874059.cms?frmapp=yes&from=mdr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._பாண்டியன்&oldid=3895997" இலிருந்து மீள்விக்கப்பட்டது