உள்ளடக்கத்துக்குச் செல்

வி. எஸ். சுப்ரமணிய ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவான் பகதூர்
வி. எஸ். சுப்ரமணிய ஐயர்
திருவிதாங்கூரின் திவான்
பதவியில்
1929–1932
ஆட்சியாளர்சித்திரை திருநாள் (சேது லட்சுமி பாயி அரசப் பிரதிநிதி 1931)
முன்னையவர்மா. எ. வாட்சு
பின்னவர்தாமசு ஆசுட்டின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1877-10-21)21 அக்டோபர் 1877
திருவிதாங்கூர்

திவான் பகதூர் வி.எஸ்.சுப்ரமணிய ஐயர் (V. S. Subrahmanya Iyer) (பிறப்பு: 1877 அக்டோபர் 21) இவர் ஓர் இந்திய நிர்வாகி ஆவார். இவர் 1929 முதல் 1932 வரை திருவிதாங்கூரின் திவானாக பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

சுப்ரமண்ய ஐயர் 1877 அக்டோபர் 21 அன்று எஸ். வைத்யநாத ஐயருக்கு பிறந்தார். [1] புனித சூசையப்பர் கல்லூரியில் படித்த இவர் திருவிதாங்கூரில் வழக்கறிஞராக பயிற்சியை ஆரம்பித்தார். 1929 இல் திவானாக நியமிக்கப்படுவதற்கு முன்பு திருவிதாங்கூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். [2]

திருவிதாங்கூரின் திவான்[தொகு]

சுப்ரமண்ய ஐயர் 1929 ஆம் ஆண்டில் திருவிதாங்கூரின் திவானாக நியமிக்கப்பட்டார். [3] முகம்மது ஹபிபுல்லாவுக்குப் பின் 1932 வரை இவர் திவானாக பணியாற்றினார்.

1930 ஆம் ஆண்டில், வெங்கட்ராம ஐயர் திருவிதாங்கூர் தேவசுவம் ஆணையராக நியமிக்கப்பட்டார். [3] 1931 ஆம் ஆண்டில், சுப்ரமண்ய ஐயர் திருவிதாங்கூரில் மோதிலால் நேருவின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒரு மாணவர் போராட்டத்தை சமாளிக்க வேண்டியிருந்தது.

பிற்கால வாழ்வு[தொகு]

திவானாக ஓய்வு பெற்றதை அடுத்து சுப்ரமண்ய ஐயர் பொது வாழ்க்கையில் தீவிரமாக இருந்தார். 1932 நவம்பர் 25, அன்று, மகாராஜாவின் ஆலோசகரான சர் சே. ப. இராமசுவாமி, கோயில் நுழைவு ஆணையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்தை அறியும் குழுவின் தலைவராக இவரை நியமித்தார். [4] குழுவின் மற்ற உறுப்பினர்கள் உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர், மகாதேவ ஐயர் மற்றும் நம்பி நீலகண்ட சர்மா ஆகியோர். இக்குழு கோவில் நுழைவுக்கு ஆதரவானவர்களை நேர்காணல் செய்தது. [5] மேலும், கோவில் நுழைவதை தீவிரமாக ஊக்கப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பித்தது. இருப்பினும், சர் சே.ப. இராமசாமி ஐயர் அறிக்கையை புறக்கணித்து, வேறொரு முக்கிய சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

1934 இல், சுப்ரமண்ய ஐயர் கேரள இந்துக் சங்கத்தின் தலைவரானார். [6] 1941 இல் இரவீந்திரநாத் தாகூர் இறந்தவுடன், சுப்ரமண்ய ஐயரைத் தலைவராகக் கொண்டு கேரள தாகூர் அகாதமி உருவாக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. The Who's who in Madras: A pictorial who's who of distinguished personages, princes, zemindars and noblemen in the Madras Presidency. 1939. p. 253.
  2. At the turn of the tide: the life and times of Maharani Setu Lakshmi Bayi. 1995. p. 373.
  3. 3.0 3.1 "The National Archives". Government of the United Kingdom.
  4. S. N. Sadasivan (2000). A social history of India. p. 539.
  5. State and Society. 1983. p. 50.
  6. The Who's who in Madras: A pictorial who's who of distinguished personages, princes, zemindars and noblemen in the Madras Presidency. Pearl Press. 1939. p. 253.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._சுப்ரமணிய_ஐயர்&oldid=2996529" இலிருந்து மீள்விக்கப்பட்டது