வி. எல். சி. ஊடக இயக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. எல். சி. ஊடக இயக்கி
VLC Icon.svg
Vlc Tamil.jpg
வி. எல். சி. ஊடக இயக்கி
தொடக்க வெளியீடுபெப்ரவரி 1, 2001; 21 ஆண்டுகள் முன்னர் (2001-02-01)
மொழிசி, சி++
இயக்கு முறைமைக்னூ லினக்சு, விண்டோஸ் 2000 சேவைப் பொதி 4உம் அதற்குப் பிந்தியவையும், மாக் ஓ. எசு.
கிடைக்கும் மொழி53 மொழிகள்
மென்பொருள் வகைமைஊடக இயக்கி
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம் பதிப்பு 2 மற்றும் அதற்குப் பிந்தியவை
இணையத்தளம்http://www.videolan.org/vlc

வி. எல். சி. ஊடக இயக்கி (ஆங்கிலம்: VLC Media Player) என்பது ஓர் இலவச ஊடக இயக்கி ஆகும். இந்த மென்பொருள் கோப்புகள், குறுவட்டுக்கள், இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுக்கள் என்பனவற்றிலிருந்து காணொளிகளைத் திறக்கக் கூடியது.[1] வி. எல். சி. ஊடக இயக்கி தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது.

வசதிகள்[தொகு]

வி. எல். சி. ஊடக இயக்கியானது காணொளிகள், ஒலிக் கோப்புகள் என்பனவற்றைத் திறக்கக் கூடியது.[2][3] இந்த மென்பொருளை இலகுவாகக் கையாள முடியும். அத்துடன் வி. எல். சி. ஊடக இயக்கியானது சக்தி வாய்ந்ததும் வேகமானதும் ஆகும். கோப்புக்கள், வட்டுக்கள் (குறுவட்டு, இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு), வலைப் புகைப்படக் கருவிகள், இணையத்தில் உள்ள காணொளிகள் என்பனவற்றைத் திறக்கக் கூடியது. முற்றிலும் இலவசமானதும் கட்டற்றதுமான வி. எல். சி. ஊடக இயக்கி விளம்பரங்கள் அற்ற மென்பொருளாகும். விண்டோஸ், லினக்சு, மாக் ஓ. எசு., யுனிக்ஸ் ஆகிய இயங்குதளங்களில் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. வி. எல். சி. ஊடக இயக்கி (ஆங்கில மொழியில்)
  2. காணொளி வடிவங்கள் (ஆங்கில மொழியில்)
  3. ["ஒலி வடிவங்கள் (ஆங்கில மொழியில்)". 2010-01-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி) ஒலி வடிவங்கள் (ஆங்கில மொழியில்)]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வி.எல்.சி.
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எல்._சி._ஊடக_இயக்கி&oldid=3372325" இருந்து மீள்விக்கப்பட்டது