விஸ்காயா பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
விஸ்காயா பாலம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Wide view from downriver, in Areeta.
வகைகலாச்சார
ஒப்பளவுi, ii
உசாத்துணை1217
UNESCO regionஐரோப்பா மற்றும் வட அமேரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2006 (30 ஆவது தொடர்)
பாலத்தின் மேற்பகுதியின் தோற்றம்

விஸ்காயா பாலம் (பாஸ்க் மொழியில் Bizkaiko Zubia, எசுப்பானிய மொழியில் Puente de Vizcaya), என்பது போர்துகலீட் மற்றும் லாஸ் அரீனாஸ் (கேட்சோவின் பகுதி) நகரங்களை இணைக்கும் போக்குவரத்துப் பாலம் ஆகும். இது எசுப்பானியாவின் பிச்கேய் மாகாணத்தில் உள்ளது. இது இபைசாபல் ஆற்றின் வாய்ப்பகுதியின் மேலாக அமைந்துள்ளது.

இது அமைந்துள்ள பகுதியில் உள்ள மக்கள், மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பன இப்பாலத்தை பொதுவாக Puente Colgante (எசுப்பானிய மொழியில் தொங்கு பாலத்தை குறிக்கிறது), என்று குறிப்பிட்டாலும் இதன் அமைப்பு தொங்கு பாலத்தை விட சற்று வித்தியாசமானது.

பாலம்[தொகு]

பாலம் தற்போதும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இதன் நீளம் 164 மீட்டர் மற்றும் உயரம் 45 மீட்டர் ஆகும். இதனைப் பயன்படுத்தி ஒன்றரை நிமிடத்தில் ஆறு கார்களும் சில டசின் பயணிகளும் கடக்க முடியும். இந்த அமைப்பை தாங்க இரண்டு என்ற வகையில் ஆற்றங்கரையின் இரண்டு பக்கங்களிலும் தூண்கள் போன்ற அமைப்பு உள்ளது. அண்ணளவாக இப்பாலத்தை நான்கு மில்லியன் பயணிகளும் அரை மில்லியன் வாகனங்களும் பயன்படுத்துகின்றன. [1]


படக் காட்சியகம்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. Chu, Nick. "Vizcaya ("Hanging") Bridge: Half Gondola, Half Bridge, 100% Awesomeness". The Gondola Project. 22 பிப்ரவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 43°19′23″N 3°01′01″W / 43.3231°N 3.0169°W / 43.3231; -3.0169

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்காயா_பாலம்&oldid=3572041" இருந்து மீள்விக்கப்பட்டது