விழும் மனிதன் ஓவியம்
விழும் மனிதன் Falling Man | |
---|---|
ஓவியர் | மேக்சு பெக்மான் |
ஆண்டு | 1950 |
ஆக்கப் பொருள் | நெய்யோவியம் |
இடம் | வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம், வாசிங்டன், டி. சி. |
விழும் மனிதன் ஓவியம் (Falling Man (painting) என்பது 1950 ஆம் ஆண்டு செருமன் நாட்டைச் சேர்ந்த ஓவியர் மேக்சு பெக்மான் என்பவர் வரைந்த ஓவியமாகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அகநிகழ்வுகளை புதுமையான முறையில் புலப்படுத்தும் கலைஞர்கள் வெளிப்பாட்டியக் கலைஞர்கள் என்று வகைப்படுத்தப்பட்டனர். மேக்சு பெக்மான் இப்பெயரையும் இவ்வியக்கத்தையும் நிராகரித்தார் என்றாலும் இவரை வெளிப்பாட்டியக் கலைஞர் என்றே அப்போது அடையாளப்படுத்தப்பட்டார். மேக்சு பெக்மான் (1884-1950). இரண்டாம் உலகப் போரின்போது நாட்சி செருமனியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இவர் அமெரிக்காவில் வாழ்ந்தபோது வாழ்க்கையின் இறுதி ஆண்டில் இந்த ஓவியத்தை பெக்மான் உருவாக்கினார்.
விழும் மனிதன் ஓவியம் இப்போது வாசிங்டன் டிசியில் உள்ள தேசிய கலைக்கூடத்தின் [1] நிலையான தொகுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று உலக வர்த்தக மைய கோபுரத்திலிருந்து விழுந்த மற்றும் அழிந்த நபர்களை இந்த ஓவியத்தில் குதிக்கும் நபர்கள் முன்னறிவிப்பு செய்வது போல் உள்ளதாகக் கருதப்படுகிறது. அதே நியூயார்க்கு நகரத்தில் தெளிவான மேகமற்ற வானம் போன்ற அமைப்பில் ஓவியம் வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[2]
பெக்மானின் விழும் மனிதன் ஓவியம் அவருடைய இசைத்துறை ஆக்கப்படைப்புகளின் முன்னுரை என சொல்லப்படுகிறது. 1943-1944 ஆம் ஆண்டு காலத்தில் பெக்மான் வரைந்த ஓவியங்கள் சிலவற்றில் இத்தகைய குதிக்கும் நபர்கள் ஓவியம் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது.[3] [4]
விழும் மனிதன் ஓவியம் நியூயார்க்கு நகரத்தின் பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 2016-17 ஆம் ஆண்டு கண்காட்சியில் சேர்க்கப்பட்டது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Max Beckmann - Falling Man, 1950". National Gallery of Art. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
- ↑ Klein, Lee (September 2003). "Art on the Eve of Destruction". PAJ: A Journal of Performance and Art (MIT Press) 25 (3): 20–25. பன்னாட்டுத் தர தொடர் எண்:1537-9477. இணையக் கணினி நூலக மையம்:39511092. https://www.jstor.org/stable/3246416. பார்த்த நாள்: 18 October 2021.
- ↑ ""Max Beckmann in New York," Metropolitan Museum of Art, through February 20, 2017". AEQAI. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
- ↑ "(PDF) A Poetics of Space: Max Beckmann's "Falling Man" | Charles Haxthausen". Academia.edu. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
- ↑ https://www.nytimes.com/2016/10/21/arts/design/review-max-beckmann-in-new-york-a-belated-but-full-blown-homage-to-a-german-modernist.html