விழிஞ்ஞம் பன்னாட்டுத் துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழிஞம் பன்னாட்டு ஆழ்நீர் பன்னோக்குத் துறைமுகம்
விழிஞம் பன்னாட்டு துறைமுகத்தின் சின்னம்
Map
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும்
அமைவிடம்
நாடு India
அமைவிடம்விழிஞம், திருவனந்தபுரம், கேரளம்
ஆள்கூற்றுகள்08°22′45″N 76°59′29″E / 8.37917°N 76.99139°E / 8.37917; 76.99139
Vizhinjam is located in இந்தியா
Vizhinjam
Vizhinjam
Vizhinjam (இந்தியா)
விவரங்கள்
நிர்வகிப்பாளர்விழிஞம் பன்னாட்டு துறைமுக நிறுவனம்
உரிமையாளர்கேரள அரசு
புள்ளிவிவரங்கள்
வலைத்தளம்
http://www.vizhinjamport.in/

விழிஞம் பன்னாட்டுத் துறைமுகம் (Vizhinjam International Seaport) இந்தியாவின் தென்கோடி மாநிலமான கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் அரபிக்கடல் ஓரத்தில் புதியதாக கட்டமைக்கப்பட்டு வரும் துறைமுகம் ஆகும்.[1] இந்தத் திட்டப்பணிகளின் மொத்த செலவினம் மூன்று கட்டங்களில் 6595 கோடிகளாக திட்டமிடப்பட்டுள்ளது. கட்டி முடித்த பின்னர் உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக இருக்குமென மதிப்பிடப்படுகிறது.

விழிஞம் துறைமுகப் பகுதியில் பன்னாட்டு கடற்பாதையிலிருந்து 10 கடல்வழி மைல்களுக்கும் கடலோரத்திலிருந்து 1 கடல்வழி மைல் தொலைவிற்கும் இயல்பான 24 மீட்டர் ஆழம் கிடைக்கின்றது.

விழிஞம் பன்னாட்டுத் துறைமுக நிறுவனம் (VISL) முழுமையும் அரசுடைமையான (முழுமையும் கேரள அரசுக்கு உரிமையானது) நிறுவனமாகும். இது புதிய துறைமுக கட்டுமானப்பணிகளை செயற்படுத்தும் நிறுவனமாகும்.

வரலாறு[தொகு]

8 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை விழிஞம் பாண்டியர் நாட்டுத் துறைமுகமாக விளங்கியது. இது சங்ககாலத்தில் பாண்டியர் கீழிருந்த ஆய் நாட்டில் இருந்த தொலெமி குறிப்பிடும் எலங்கோன் நகரமே என்பது மயிலையார் கருத்து.[2] மேலும் நெடுமாறன் என்ற பாண்டியன் சேர அரசனோடு கோட்டாற்றிலும் விழிஞத்திலும் போர் செய்தானெனப் பாண்டிக்கோவை கூறுகின்றது.[3] இதில் விழிஞத்தில் நடந்தது கடற்போர் என்பது குறிப்பிடத்தக்கது.[4] சோழ அரசிடம் தோற்றபிறகு விழிஞம் துறைமுகத்தின் முக்கியத்துவம் குறையத் துவங்கிந்து. இன்றளவில் இது ஓர் மீன்பிடித் துறைமுகமாக உள்ளது.

விழிஞம் துறைமுகத் திட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்னதாக திட்டமிடப்பட்டது. முதலில் பொதுத்துறை தனியார் கூட்டுறவு- தனியார் சேவை பாணியில் இதனை திட்டமிட்டனர். இரண்டு சுற்று ஏலத்திற்குப் பிறகு இம்முயற்சி தோல்வியடைந்தது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Vizhinjam port". About the port. Archived from the original on 6 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 7 September 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. துறைமுகப் பட்டினங்கள் (2007). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். 150. 
  3. 'விண்டார்பட விழிஞக் கடற்கோடியுள்' (இறை. உரை. செய். 30)
  4. "கவிமணியின் கவிதைகள்". www.tamilvu.org. www.tamilvu.org. p. 483. பார்க்கப்பட்ட நாள் ஃபிப்ரவரி 16, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)