விளாதிமிர் மகரன்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விளாதிமிர் மகரன்கோ
MakarenkoVladimirAf.jpg
பிறப்பு9 திசம்பர் 1933
மாஸ்கோ
இறப்பு13 பெப்ரவரி 2008 (அகவை 74)
மாஸ்கோ
படித்த இடங்கள்
  • Moscow State University Faculty of Economics
பணிசொற்களஞ்சிய ஆசிரியர்
வேலை வழங்குபவர்
  • Institute of Scientific Information on Social Sciences
  • MSU The Institute of Asian and African Studies

விளாதிமிர் மகரன்கோ (Makarenko, Vladimir Afanasyevich), உருசிய நாட்டு மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், அகராதி தொகுப்பாளர் ஆவார். 1952 ஆம் ஆண்டில் மாஸ்கோ மிலிட்டரி கல்லூரியில் தன் உயர்படிப்பைக் கற்று, மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துரையில் படிப்பைத் தொடர்ந்தது.

மாஸ்கோவின் தேசிய வெளிநாட்டு அகராதிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். உருசிய-தகலாக் அகராதி(1960), உருசியம்-மலையாளம் அகராதி, உருசியம்-கன்னடம் அகராதி ஆகியவற்றை மிக்கைல் ஆன்றனோவ் உதவியுடன் தொகுத்தார். இவரது காலம் 9. 12. 1933 - 13. 2. 2008 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும்.

1960களில், மாஸ்கோவிலுள்ள தெற்காசிய மொழிகள் கழகத்தில் (Institute of Oriental Languages, MGU) மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து மலாய்/இந்தோனேசிய (அதாவது தென்கிழக்காசிய) மொழிகள் துறையில் தகலாகு மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கத் தொடங்கினார். மொழியியலின் பல்வேறு கூறுகள் குறித்து விரிவுரையாற்றினார். 1964 வரை ஆத்திரோனேசிய மொழிகள் தொடர்பாக விரிவுரையாற்றி, தகலாகு மொழியையும் கற்பித்துவந்தார். 1966ஆம் ஆண்டில், ”நவீன தகலாகு மொழியின் அமைப்பு” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். மேலும், பாடநூல்களையும் பாடத்திட்டங்களை வகுப்பதிலும் செலவிட்டார். பல நாடுகளில் மொழியியல் தொடர்பான கருத்தரங்குகளில் பங்குபெற்றுள்ளார். உருசிய நாட்டு தெற்காசியவியல் கழகம், உருசிய எழுத்தாளர் சங்கம், பிலிப்பீன்சு நாட்டு மொழியிலாளர்கள் குழு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.

1985 ஆம் ஆண்டில் தகலாக் துறை மூடப்படவே, உருசிய அறிவியல் கழகத்தில் இணைந்தார். பின்னர் மாஸ்கோவில் தகலாக் துறை மீண்டும் திறக்கப்படவே, தகலாகு மொழியைக் கற்பித்தார்.

இவர் அறுபது நூல்களை பதிப்பித்திருக்கிறார். தமிழ், தகலாகு, ஆங்கிலம், உருசியம் ஆகிய மொழிகளில் சமூக மொழியியல், அமைப்பு, அகராதிகள் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளார். உருசியா, உக்ரைன், செக் குடியரசு, சுலோவாக்கியா, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, பிலிப்பீன்சு, ஜப்பான், சீனா, சிங்கப்பூர் நாடுகளின் கலைக்களஞ்சியங்களுக்குத் தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாதிமிர்_மகரன்கோ&oldid=3142351" இருந்து மீள்விக்கப்பட்டது