வில்லியம் இராபர்ட் ஓகில்வி-கிராண்ட்
வில்லியம் இராபர்ட் ஓகில்வி-கிராண்ட் (William Robert Ogilvie-Grant)(25 மார்ச் 1863 - 26 சூலை 1924) ஒரு இசுக்காட்லாந்து பறவையியலாளர் ஆவார்.
இளமை மற்றும் கல்வி
[தொகு]
கிராண்ட் 25 மார்ச் 1863 அன்று படைத்தலைவர் கெளரவத்தின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். பெரும்எடின்பரோவில் உள்ள பெட்டசு கல்லூரியில் கல்வி பயின்றார். இங்கு இவர் விலங்கியல் மற்றும் உடற்கூறியல் துறையில் படித்தார்.[1] இவர் கார்கில்ஃபீல்ட் தயாரிப்பு பள்ளியிலும் படித்துள்ளார்.[2]
தொழில்
[தொகு]1882-ல் ஓகில்வி-கிராண்ட் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உதவியாளரானார். இவர் ஆல்பர்ட் சிஎல்ஜி குந்தரிடம் மீனியல் கல்வி கற்றார். மேலும் 1885-ல் ரிச்சர்ட் பவுட்லர் சார்ப்[1] இந்தியாவிற்கு வருகை தந்ததன் கீழ் பறவையியல் பிரிவின் தற்காலிகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் 1909 முதல் 1918 வரை பறவைகள் காப்பாளராக பணியாற்றினார்.[3]
இவர் 1904 முதல் 1914 வரை பதவி வகித்த பிரித்தானிய பறவையியலாளர்கள் குழு ஆய்விதழின் ஆசிரியராகவும் பவுட்லர் சார்ப்பிற்குப் பிறகு பதவியேற்றார்.
ஓகில்வி-கிராண்ட் பல சேகரிப்பு பயணங்களை மேற்கொண்டார். இதில் குறிப்பிடத்தகவைகளாக சுகுத்திரா, மதீரா மற்றும் கேனரி தீவுகளுக்கான பயணம் அமைந்துள்ளது.
விவரிக்கப்பட்ட உயிரலகு
[தொகு]- வில்லியம் ராபர்ட் ஓகில்வி-கிராண்ட் என்பவரால் பெயரிடப்பட்ட பகுப்பு:உயிரலகுகளைப் பார்க்கவும்
நினைவாகப் பெயரிடப்பட்ட உயிரலகு
[தொகு]- ஓகில்வி-கிரான்ட் என்பது சோகோட்ராவில் காணப்படும் அகணிய உயிரியான கெமிடாக்டைலசு கிராண்டி என்ற மரப்பல்லி சிற்றினத்தின் அறிவியல் பெயரில் நினைவுகூரப்படுகிறது.[4]
- போன்சோ இரட்டை-வால் கெளதாரி பறவை டெர்னிஸ்டிஸ் பைகல்காரடசு ஓகில்விகிராண்டி (பேனர்மேன் 1922) என்பது இவரது நினைவாகப் பெயரிடப்பட்ட பறவையாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஒகில்வி-கிராண்ட் அட்மிரல் மார்க் ராபர்ட் பெச்செலின் மகள் மவுட் லூயிசாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர். இவரது மகன் மார்க் ஓகில்வி-கிராண்ட் ஒரு இராஜதந்திரி மற்றும் தாவரவியலாளர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "William Robert Ogilvie Grant" (PDF). britishbirds.co.uk. Retrieved 17 February 2022.
- ↑ The Auk (in ஆங்கிலம்). American Ornithologists' Union. 1924. p. 644.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles (in ஆங்கிலம்). JHU Press. p. 106. ISBN 978-1-4214-0135-5.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Grant, W.R.O.", p. 106).
ஆதாரம்
[தொகு]- Mullens and Swann - A Bibliography of British Ornithology. .