உள்ளடக்கத்துக்குச் செல்

வில்பர் ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்பர் ஸ்மித்
வில்பர் ஸ்மித்
வில்பர் ஸ்மித்
பிறப்பு(1933-01-09)9 சனவரி 1933
இறப்பு13 நவம்பர் 2021(2021-11-13) (அகவை 88)
கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
தொழில்புனைகதை எழுத்தாளர்
வகைஇயற்கை, சாகசம்
இணையதளம்
wilbursmithbooks.com

வில்பர் அடிசன் ஸ்மித் (Wilbur Addison Smith, 9 ஜனவரி 1933[1] - நவம்பர் 13, 2021) சம்பிய நாட்டைச் சேர்ந்த ஆங்கில வரலாற்று புனைவு எழுத்தாளர் ஆவார்.இவரின் எழுத்துக்கள் பொதுவாக தென் பகுதி ஆபிரிக்காவில் நான்கு தசாப்தமாக நிலவி வரும் சர்வதேச தலையீடுகளை கறுப்பின மற்றும் வெள்ளையின குடும்பங்களின் பார்வையில் எழுதப்பட்டுள்ளது.

கணக்காளர் வேலைப்பயிற்சியில் இருந்த போது when the lion feeds எனும் முதல் நாவல் மூலமாக இவர் திரைத்துறை அறிமுகம் பெற்றார்.இது அவரை முழுநேர எழுத்தாளராக ஊக்கப்படுத்த அவர் இன்னும் மூன்று புனைவுகளை எழுதி வெளியிட அம்மூன்றும் உடனடியாக விற்றுத்தீர்ந்தது.வெளியீட்டாளர் சால்ஸ் பிக்ஸ்ன் அறிவுரை இவரை வேட்டை மற்றும் சுரங்க களங்களை பின்ணனியாக கொண்ட புனைவுகளை உருவாக்க காரணமாக இருந்ததென இன்றும் ஸ்மித் குறிப்பிடுகிறார்.இவரின் 35 நூல்கள் 2014 வரை 120 மில்லியன் பிரதிகள்(அவற்றில் இத்தாலியில் மட்டும் 24 மில்லியன் பிரதிகள்) விற்பனை ஆகியுள்ளன.[2]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஸ்மித் வடக்கு றொடீசியாவிலுள்ள (தற்போது கப்வே,சம்பியா)ப்ரோக்கன் ஹில் எனும் ஊரில் பிறந்தார். உலோகத் தொழிலாளியான ஸ்மித்தின் தந்தை பின்னாளில் ஒரு உலோக தொழிற்சாலையை திறந்தார்.பின் ஒரு பண்ணை நிலத்தையும் வாங்கினார்.தன் தந்தையைப் பற்றிக் குறிப்பிடும் போது ஸ்மித் ''அவர் ஒரு இரும்பு மனிதர்.அவரின் தொழில் அவரின் கைகளை உறுதியாக்கியது.அவர் ஒரு குத்துச்சண்டை வீரர்,வேட்டைக்காரர்.நான் நினைக்கவில்லை அவர் தன் வாழ்நாளில் என் புத்தகங்கள் உட்பட ஒரு புத்தகத்தையேனும் படித்திருப்பாரென்று.''

குழந்தை பருவத்தில் ஸ்மித் மலேரியா காய்ச்சலுக்கு ஆட்பட்டு பத்து நாட்களின் பின் பூரண குணமடைந்தார்.[3] ஸ்மித் தன்ஆரம்ப வாழ்க்கையை 30,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட,காடு, மலைகள்,புன்னிலங்கள் உள்ளடக்கிய தன் தந்தையின் பண்ணை நிலங்களில் கழித்தார். அங்கு அவரின் நண்பர்களாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் மற்றும் கறுப்பின சிறுவர்கள் இருந்தனர். அவர்களுடன் ஸ்மித் காடுகளில் சுற்றித்திரிந்து வேட்டையாடி நாட்களை கழித்தார்.அவரின் தாய் வழங்கிய புத்தகங்கள் மூலமாக புனைகதைகளில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. என்றாலும் அவரின் தந்தை அவர் எழுத்தாளர் ஆவதை விரும்பவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Fox, Chloe (28 Apr 2007). "The world of Wilbur Smith, novelist". Daily Telegraph. https://www.telegraph.co.uk/culture/3664793/The-world-of-Wilbur-Smith-novelist.html. பார்த்த நாள்: 14 March 2013. 
  2. "Wilbur Smith -".
  3. "Early Days". Archived from the original on 29 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்பர்_ஸ்மித்&oldid=3571780" இலிருந்து மீள்விக்கப்பட்டது